»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆளவந்தானில் நந்து, விஜய் என்று 2 கமல்கள்.

நந்து, விஜய்யைவிட 5 கிலோ அதிக எடை கொண்டவராம்.

நந்துவின் குரலில் வித்தியாசத்தைக் காட்டியுள்ளாராம் கமல். இதற்காக வாய்ஸ் கண்ரோலர் என்ற கருவியை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

டெல்லியில் இண்டர்காண்டினன்டல் ஓட்டலின் 36- வது மாடியிலிருந்து டூப் எதுவும் போடாமல் உடலில் கயிற்றைக் கட்டிக் கொண்டு கமலே குதித்தாராம்.

படப்பிடிப்பு கார்கில், குல்மார்க் போன்ற பகுதிகளிலும் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா பெரிதும் உதவினாராம்.

கமாண்டோவாக வரும் கமல் (விஜய்), தேசியப் பாதுகாப்புப் படையில் 1 மாதம் பயிற்சி பெற்றாராம்.

உண்மையான கமாண்டோக்கள் 22 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடத்தில் கடந்தார்களாம். பயிற்சியின் முடிவில் கமல் அந்த தூரத்தை 22 நிமிடத்தில்கடந்தாராம்.

காஷ்மீர் பனிமலைகளில் 3 டிகிரி செல்சியஸ் குளிரில் கமல் குளிரையும் பொருட்படுத்தாமல் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார்.

சங்கர் மகாதேவன் தன் நண்பர்களான எசான், லாயுடன் இணைந்து இசையமைக்கும் முதல் தமிழ்ப் படம் இது.

குடியரசு தினத்தன்று நடைபெறும் ராணுவ அணிவகுப்பில், அரசு அனுமதியுடன் நடிகர்களும் கலந்துகொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

ஆசியாவிலேயே முதன் முதலாக மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன வகை கேமராவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil