»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர்கள் எல்லோருக்கும் வேடங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சிலரால் மட்டுமே அந்த 2 வேடங்களிலும் உள்ளவித்தியாசங்களை நுணுக்கமாகக் காட்ட முடியும்.

அப்படிப்பட்டவர்களில் கமலும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதுவும் சமீப காலமாக ஒவ்வொரு படத்திலும் தன் கேரக்கடருக்கு மெருகைக்கூட்டி வெளிநாட்டினரையும் அசரவைக்கும் வகையில் படங்களைக் கொடுத்து வருகிறார்.கமல்.

இதுவரை கமல் 20 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போதுள்ள நவீன யுக்திகளைப் பயன்படுத்தி மிகப்பிரும்மாண்டமாகதயாரிக்கப்பட்டு வெளிவர இருக்கும் படம் ஆளவந்தான்.

2 கேரக்டர் என்றாலே ஒன்று நல்லவர், மற்றவர் கெட்டவர் என்பதுதானே எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பார்முலா. அதைத்தான்இதிலும் பின்பற்றியிருக்கிறார்கள்.

நல்லவர் விஜய்குமார் தேசியப் பாதுகாப்புப் படையில்(கறுப்புப் பூனைப்படை) கமாண்டோ.

நல்லவர் என்பதைத் தவிர, வேகமானவர், விவேகமும் கொண்டவர், அன்பானவர், அதிரடியும் கற்றவர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு உண்டாம்.

கெட்டவர் நந்தகுமார் தீவிர மனநோயாளி என்று கருதப்பட்டு 22 ஆண்டுகள் மனநலக் காப்பகத்தில் சிறைவைக்கப்பட்டவர். இவர் ஆபத்தானவர், அதிசாகசக்காரர் என்கிறார்கள்.

2 பேரும் இராணுவத்தில் லெப்ஐடினன்ட் கர்னலாக இருந்து, மது, மாது போன்ற பழக்கங்களால் ஒழுங்கீன நடவடிக்கைக்கு ஆளான சந்தோஷ் குமாரின்மகன்கள்.

விஜய் தேஜேஸ்வரி( ரவீனா டாண்டன் ) என்ற என்.டி.டி.வியில் நிருபராக உள்ள பெண்ணைக் காதலிக்கிறார். டாண்டன் தனது நடிப்புத் திறமையைத் தவிர,இன்னபிற அத்தியாவசியத் திறமைகளையும் காட்டியிருப்பார் என்று நம்பலாம்.

நந்துவை ஷர்மிலி(மனீஷா கொய்ராலா) "லவ்"வுகிறார். ஏற்கனவே இந்தியனில் கமலின் பிடியில் சிக்கியவர். கமலின் கெஞ்சல், கொஞ்சல்,குறும்புகளுக்கு தயாராகத்தான் வந்திருப்பார்.

இவர்கள் தவிர பாத்திமா பாபு, சரத்பாபு, ரியாஸ்கான், விக்ரம் தர்மா மற்றும் பல தலைகளும் பெரிய பெரிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil