»   »  ஷங்கர் சார் செட்டில் 3வது வாட்டி: மகிழ்ச்சியில் துள்ளும் ஏமி ஜாக்சன்

ஷங்கர் சார் செட்டில் 3வது வாட்டி: மகிழ்ச்சியில் துள்ளும் ஏமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் தனது 25வது பிறந்தநாளை 2.0 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் நாயகி ஏமி ஜாக்சன். மரத்தை சுற்றி பாடி ஆடும் சாதாரண ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை.


நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் ஏமிக்கு.


பிறந்தநாள்

பிறந்தநாள்

ஏமி நேற்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை கொண்டாட அவர் தனது நாட்டிற்கு செல்லவில்லை. மாறாக 2.0 படப்பிடிப்பு தளத்திலேயே பிறந்தநாளை கொண்டாடினார்.


கேக்

2.0 படக்குழுவினர் ஏமியின் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய கேக் வாங்கினர். அந்த கேக்கை ஏமி மகிழ்ச்சியுடன் வெட்டி தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடினார்.


மூன்றாவது பர்த்டே

ஷங்கர் சார் பட செட்டில் மூன்றாவது முறையாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளேன். இம்முறை மிஸ்டர் ரஜினியுடன். 25வது பிறந்தநாளை இதை விட சிறப்பாக கொண்டாட முடியாது என ட்வீட்டியுள்ளார் ஏமி.


வாழ்த்துக்கள்

ஏமிக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரும் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
English summary
Actress Amy Jackson tweeted that, 'Third birthday spent on shankarshanmugh film set & this time with Mr superstarrajini ! I couldn't ask for a better way to celebrate 25 ☺️🔝'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil