»   »  அனாமிகா.. அனாமிகா!

அனாமிகா.. அனாமிகா!

Subscribe to Oneindia Tamil
ஆந்திராவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ள கவர்ச்சி சுறா அனாமிகா கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார்.

பளபளப்பும், தளதளப்பும் கொண்ட அனாமிகா இப்போது கிரிவலம், பதவி படுத்தும் பாடு என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இருபடங்களிலும் அவருக்கு கட்டுக்கடங்காத கவர்ச்சியுடன் கூடிய ஹீரோயின் வாய்ப்பு.

அவர் நடித்த ஒரு படமும் இன்னும் வரவில்லை. இருந்தாலும் அவரது கவர்ச்சி பிளஸ் ஒத்துழைப்பு குறித்து கோலிவுட்டில் காட்டுத் தீ போலசெய்தி பரவியதால் தயாரிப்பாளர்கள் முண்டியடிக்கிறார்கள்.

பதவி படுத்தும் பாடு படத்தில் இவரது கேரக்டர் பெயர் பொன்னி. ஒரு மலை கிராமத்துப் பெண். ரஞ்சித்தின் ஆசை நாயகியாகநடித்துள்ளார். இந்தப் படத்திற்காக அனாமிகா ஆடிய நதி டான்ஸ், (அது தாங்க நதி நீரில் முங்கி எழுந்து ஹீரோயின் பாடுவாரே)ஆடியுள்ளார். இந்தப் படப்பிடிப்பு வீரப்பன் இல்லாத தைரியத்தில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் சிறிய அருவிப் பகுதியில்எடுக்கப்பட்டதாம்.

அப்போது ஒரு முதலை அனாமிகாவை நோக்கி பாய்ந்து வர, தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிறார்கள். வேகமாக நீந்துகரையோதுங்கியதால் தப்பிய அனாமிகா மீண்டும் ஆற்றுக்குள் இறங்க மறுத்துவிட பாடலை அத்தோடு கட் செய்துவிட்டு மிச்சத்தைமேட்டூர், மலைமாதேஸ்வரம், அந்தியூர் ஆகிய பகுதிகளில் எடுத்து முடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குவது துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிய சத்யா.

இதைத் தவிர எம்.ஜி.ஆரின் நாடக சபா என்ற வித்தியாசமான தலைப்பு கொண்ட படத்திலும் நடிக்கிறார் அனாமிகா. இதில் மோனிஷ் என்றபுதுமுகம் நடிக்கிறார். நெருக்கமான காட்சிகளில் மோனிஷுக்கு காய்ச்சல் வந்துவிடும் அளவுக்கு அனாமிகா வேகம் காட்டியிருக்கிறார்.

ராஜ கிருஷ்ணகாந்த் என்பவர் இயக்கும் இந்தப் படம் காமெடிக்கும் அனாமிகாவின் அனாடமிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் சூட்டிங் பரபரப்பாக நடக்கிறது.

இதே போல அதே என்ற ஒரு படத்திலும் அனாமிகாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. அது நடிக்க அல்ல, குத்தாட்டம் போட. அதே படத்தின்கதைக்கு கவர்ச்சி தேவைப்படவில்லை என்றாலும், கவர்ச்சி இல்லாமல் படம் எடுத்தால் யார் பார்ப்பது என்ற பயம் வந்து விட்டதால் ஒருகுத்தாட்டத்தை சொருகியிருக்கிறார்கள்.

இதில் குதியாட்டம் போட்டிருக்கிறார் அனாமிகா. ஊட்டியிலும, மும்பையிலும் வைத்து இந்தப் பாட்டை சுட்டிருக்கிறார்கள். அனாமிகாவும்கொடுத்த காசுக்கு கொஞ்சம் கூட வஞ்சமில்லாமல் போட்டுத் தாக்கியிருக்கிறாராம்.

இதைத் தவிர குருதேவா என்ற படத்திலும் சின்ன வேடத்தில் நடிக்கிறார்.

நாம் முன்பே சொன்னது மாதிரி அனாமிகா நடித்து ஒரு படமும் இன்னும் ரிலீஸ் ஆகாவிட்டாலும் கோடம்பாக்கத்தில் மிகப் பரபரப்பானநபராகிவிட்டார். தன்னை அனாமிகா கொடுமைப்படுத்தியதாக அவரது வீட்டு வேலைக்காரச் சிறுமி புஷ்பலதா போலீசில் புகார் தந்ததில்இருந்து அனாமிகாவின் பெயர் தொடர்ந்து பத்திரிக்கைகளில் அடிபட்டே வருகிறது.

போலீசில் அந்தச் சிறுமி கொடுத்த புகாரில், அனாமிகா வீட்டில் நடக்கும் அரசல் புரசல் சமாச்சாரங்கள் குறித்தும் அடுக்கியிருப்பதாகசொல்கிறார்கள். இப்போது சிறுமியர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அச் சிறுமி கூறியுள்ள புகார்கள் வெளியில் டிஸ்கஸ் சொல்லும்ரகத்தில் இல்லை என்பதால் காக்கிகள் அமைதி காக்கின்றன.

ஆனாலும் அனாமிகா மீது ஒரு கண் வைக்கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.

இந் நிலையில் என் வீட்டுக்கு எந்த ஆணும் வந்து போவதில்லை என்று நிருபர்களைச் சந்தித்து விளக்கம் தந்திருக்கிறார் அனாமிகா.

தமிழில் நான் வேகமாக முன்னுக்கு வருவது பிடிக்காத சிலர் தான் சிறுமி மூலம் என்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள்,தவறான வழியில் வாய்ப்பு தேடவோ, பணம் ஈட்டவோ வேண்டிய அவசியம் எனக்கில்லை.

நான் சிறுமியர் காப்பத்திற்குச் சென்று புஷ்பலதாவை சந்தித்து, நான் உன்னை அடித்தேனா என்று கேட்டபோது அவள்அழுதுகொண்டே, எனக்கு சாப்பாடு போட்ட உங்களை நான் அப்படிச் சொல்வேனா, சொன்னால் எனக்கு கண்போய் விடும் என்று கூறினாள்.

அவள் எங்களுடன்தான் வர ஆசைப்படுகிறான். ஆனால் காப்பகத்தினர் விட மறுக்கிறார்கள். அவளை மீட்டுபெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போகிறேன் என்றார் அனாமிகா.

அப்போது அனாமிகாவுடன் இருந்த சிறுமி புஷ்பலதாவின் பெற்றோர் மோகன், அன்னபூர்ணா ஆகியோர்கூறுகையில், எங்களது மகளால் அவர்களுக்கு கெட்ட பெயர் வந்து விட்டது. அவளை அழைத்துச் செல்லப்போகிறோம். கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Read more about: actress, anamika, cinema, kollywood, ramya, sadha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil