»   »  வில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவை அதிர வைத்த ஹீரோயின்- ‘அந்தமான்’ கப்பலில் ஒரு களேபரம்

வில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவை அதிர வைத்த ஹீரோயின்- ‘அந்தமான்’ கப்பலில் ஒரு களேபரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக ஹீரோக்களுடன்தான் ஹீரோயின்கள் ஆட்டம் போடுவார்கள்.. டூயட் பாடுவார்கள்.

அந்தமான் படத்தில் இதை உல்டாவாகக் காட்டியிருக்கிறார்கள். தன்னைக் கடத்திச் செல்லும் வில்லனுக்கு சோப்புப் போட்டு குளியல் போட்ட நாயகியைப் பார்த்து 'அடக் கருமேந்திரா' என அதிர்ந்து போனாராம் ஹீரோ.


அந்தமான்

அந்தமான்

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் படம் அந்தமான்.


கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடல் பாடி நடிக்கிறார்.படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் "கோகோ கோகோ கோலா... நான் வந்திருக்கேன் கூலா..." என்ற பாடல் முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்டு வருகிறது.


முழுப் பாட்டும் கப்பலில்...

முழுப் பாட்டும் கப்பலில்...

எம்.ஜி.ஆர்-ன் ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார் இயக்குநர் (அதுக்கப்புறம் நிறைய படம் வந்துடுச்சேங்க..!) நைட் எபெக்ட்டில் பல வண்ண விளக்குகளுடன், கப்பலில் கூடுதல் செட்களை அமைத்தது மட்டும் இன்றி, நடு நடுவே குதிரைகளையும் ஓட வைத்து பிரமாண்டம் காட்டியுள்ளார்களாம்.


வில்லனுடன்

வில்லனுடன்

ஹீரோயினை வில்லன் அந்தமானுக்கு கடத்திச் செல்லும்போது இடம்பெறும் பாடலாகும். பாடல் நடுவே ஹீரோயின் வில்லனை சோப் போட்டு குளிக்கவைப்பது போல காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. 'பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு தான் ஹீரோயின் சோப் போடுவார். ஆனால், இந்த படத்தில் உல்டாவாக வில்லனுக்கு ஹீரோயின் சோப் போடுதே... டைரக்டர் இப்படி திடீர்னு காட்சிய மாத்திட்டாரே...' என ஹீரோ ரிச்சர்ட் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.


எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி எழுதியுள்ள இந்த பாடலுக்கு கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார்.மண் வளத்தை மேம்படுத்த..

மண் வளத்தை மேம்படுத்த..

இப்படத்தின் ஹீரோ ரிச்சர்ட் மண் ஆராய்ச்சி செய்ன்கின்ற மாணவர். மண் வளத்தை மேம்படுத்துவதற்காக இவர் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை, இவரிடம் இருந்து வில்லன் கண்ணதாசன் கைப்பற்ற நிணைக்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளும், அந்த கருவியை ரிச்சர்ட் வில்லனிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் கதை.


எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இப்படத்தை இயக்குகிறார். அந்தமானில் இதுவரை யாருடம் படப்பிடிப்பு நடத்தாத பல இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார்.English summary
A song was completely shoot at a ship for Andhaman movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil