»   »  அய்யய்யோ அங்கீதா

அய்யய்யோ அங்கீதா

Subscribe to Oneindia Tamil

அங்கீதா பயங்கர முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது இனிமேல் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டாராம்.

ஐ லவ் யூ ரஸ்னா என்று ரொம்பகாலத்திற்கு முன்பு அழகுப் பாப்பாவாக விளம்பரங்களில் அசத்தியவர்தான் அங்கீதா. வளர்ந்து வாலிபத்தைத் தொட்டதும் சினிமா நடிகையாகி விட்டார்.

லண்டன் படம் மூலம் தமிழுக்கு வந்த அங்கீதா, முதல் படத்திலேயே கவர்ச்சி கோதாவில் குதித்து ரசிக உள்ளங்ளை ஈர்த்தார்.

ஆனால் முதல் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பதால் அங்கீதா ராசியில்லாத ராணிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார். ஆனால் சற்றும் கவலைப்படாமல், அடுத்த படமான தகதிமிதாவிலும் கவர்ச்சி கதகளி ஆடினார். ஆனால் தகதிமிதா தப்புத் தாளங்களாகி விட்டது.

அப்செட் ஆன அங்கீதா, திருரங்கா படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது கரை சேர்ந்து விட வேண்டும் என நினைத்து முழுத் திறமையையும் கொட்டி நடித்திருந்தார். கூடவே கிளாமரையும் அள்ளி இறைத்திருந்தார்.

ஆனால் ரங்கனும் ரவுசு பண்ணி விட்டதால், பெரும் வருத்தமாகி விட்டார் அங்கீதா. இப்போது அவரிடம் தமிழ் படம் ஒன்றும் இல்லை. தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி அடுத்தடுத்து மார்க்கெட் பணால் ஆனதால் சோகத்தில் இருக்கும் அங்கீதாவிடம் வாட் நெக்ஸ்ட் என்று குசலம் விசாரித்தோம். முதலில் நான் நடித்தது தெலுங்கில் தான். அதன் பின்னர் தமிழக்கு வந்தேன். இப்போது மீண்டும் தெலுங்கு ரீ என்ட்ரி ஆகியுள்ளேன்.

தருண் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நான் நடிக்கவுள்ளேன். இதில் ப்ரியாமணியும் உள்ளார். இனி கிளாமர் வேடங்களில் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கவுள்ளேன்.

கதைக்கு தேவையானால் மட்டுமே கிளாமரில் நடிப்பேன். கவர்ச்சித் திணிப்புக்கு இனி ஸாரி சொல்லப் போகிறேன் என்கிறார் அங்கீதா.

முடிவை மறு பரிசீலனை பண்ணுங்க மேடம்!

Please Wait while comments are loading...