»   »  அந்நியன்: லேட்டஸ்ட் தகவல்கள்

அந்நியன்: லேட்டஸ்ட் தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் நடிக்கும் அந்நியன் படம் கோவை ஏரியாவில் மட்டும் ரூ. 2.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.

ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற மெகா நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையாக மாபெரும் விலைக்குவிற்பனையாகியுள்ளது இந்தப் படம்.

ஷங்கரின் இயக்கத்தில் மிக பிரமாண்டமானதாக உருவாகி வரும் இந்தப் படம் குறித்து இயக்குனர் தரப்பில் இருந்து வாய் திறக்கமறுத்தாலும் அவ்வப்போது செய்திகள் வெளியில் வருகின்றன.

ஒரு சாதாரண வழக்கறிஞர், மக்கள் பிரச்சனைகளுக்காக கொதித்து எழுந்து, அநியாயக்காரர்களை சம்ஹாரம் செய்யும் கதையாம். இதில்விக்ரம் 16 வேடங்களில் நடித்திருக்கிறார் என்று ஒரு செய்தியும் கசிகிறது.

ஆக்ஷன்-த்ரில்லராக படத்தை மிக பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார் ஷங்கர்.

படத்தின் பிரமாண்டத்துக்கு ஒரு உதாரணம், சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த செட்டை சொல்லலாம்.

மிகப் பெரிய அளவில் வளைத்துப் போட்டு கட்டப்பட்டிருந்த அந்த சந்தை போன்ற செட்டுக்குள் 15 லாரிகள் வந்து சேர்ந்தன. ஒவ்வொருலாரியிலும் சுமார் 20 எருமை மாடுகள். மொதுமொதுவென 300 எருமை மாடுகளுடன் அந்த செட்டே கிடுகிடுத்துப் போனது.

அடுத்து வந்த ஐயிட்டம் அதை விட சுவாரஸ்யமானது. அது என்ன தெரியுமா? சுமார் 100 கூடை நிறைய பாம்புகள்.

ஆளுக்கு 5 கூடைகளில் தங்கள் புள்ளைகளுடன் வந்திறங்கினார்கள் 20க்கும் மேற்பட்ட பாம்பாட்டிகள். இவ்வளவும் எதற்காம், படத்தில் 2நிமிடமே வரப் போகும் ஒரு சண்டைக் காட்சிக்காம்.

இப்படியாக ஹாலிவுட் லெவலில் மிரட்டலாக உருவாகிக் கொண்டிருக்கும் அந்நியனுக்காக காசை வரைமுறையில்லாமல் செலவிட்டுவருகிறார் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இதுவரை ரூ. 9 கோடியை இந்தப் படத்துக்காக கொட்டியிருக்கிறார் ரவிச்சந்திரன். இது இவரது13வது படம். படத்தை வெளியிடப் போவதும் ஆஸ்கர் பிலிம்ஸ் தானாம்.

(இவ்வளவு பெரிய தயாரிப்பாளகராக இருந்தாலும் மகா எளிய ஆசாமி இந்த ரவிச்சந்திரன். திடீரென ஆட்டோ அல்லது பழையஸ்கூட்டரில் தனது தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்திறங்கு அசத்துபவர்)


தமிழில் இவ்வளவு செலவில் எந்தப் படமும் எடுக்கப்பட்டதில்லை என்கிறார்கள். மெகா தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவையேஓட்டாண்டியாக்கிய ஆளவந்தான் கூட இவ்வளவு துட்டு சாப்பிட்டதாகத் தெரியவில்லை.

படம் ரூ. 9 கோடியை விழுங்கினாலும் அது ஈட்டியிருக்கும் லாபம் மிக மிகப் பெரிய தொகையாம். கோவை ஏரியாவில் மட்டும் இந்தப்படத்தை நாம் முன்பே சொன்ன மாதிரி ரூ. 2.5 கோடிக்கு விலை பேசியிருக்கிறார்கள்.

அப்புறமென்ன தமிழகத்தின் பிற ஏரியாக்கள், வெளிநாட்டு உரிமை, வெளி மாநில உரிமை, ஆடியோ கேஸட் ரைட்ஸ் இதையெல்லாம்கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள், படம் எவ்வளவு ஈட்டியிருக்கும் என்பதை.

தன்னை நம்பி படத்தில் ஏகப்பட்ட பணத்தை தியேட்டர்காரர்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளதால், பணத்தை அவர்கள் பத்திரமாகமீட்டெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாகியிருக்கிறார் ஷங்கர்.

இதனால் தான் தனது சந்திரமுகிக்கு வசதியாக, அந்நியனை கொஞ்சம் தள்ளிப் போடுமாறு ரஜினி தரப்பில் இருந்து கேட்கப்பட்டபோதுஉடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டாராம் ஷங்கர்.

இதில் ரஜினிக்கு உதவுவது ஒரு பக்கம் இருந்தாலும், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு தினத்திலேயே ஓவர் சுமைகொடுக்காமல், கொஞ்சம் டைம் குடுத்து வெளியிட்டால், தனது படத்தின் வசூலுக்கும் நல்லது என ஷங்கர் கருதுகிறாராம்.

இதனால் ரிலீஸ் தேதியை மே மாதத்துக்குத் தள்ளி வைத்துவிட்டார். அதற்குள் ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து பசங்களும் ப்ரீஆகிவிடுவார்களே. மேலும் அதற்குள் சந்திரமுகியும், மும்பை எக்ஸ்பிரசும் போரடித்திருக்கும். படங்களில் மசாலா மட்டுமல்ல,மார்க்கெட்டிங்கிலும் ஷங்கர் புலி தான்.

இதற்கிடையே அந்நியன் குறித்துக் கேள்விப்பட்ட சிரஞ்சீவிகாரு, நாகர்ஜூனாகாரு, பாலகிருஷ்ணாகாரு (ஒயிட் பேண்ட், ரெட் டை, புளுசர்ட் என வானவில் மாதிரி எப்போதும் புல்-மேக் அப்பிலேயே இருப்பாரே அவர் தான்) ஆகிய மூன்று பேரும் தங்களை வைத்துதெலுங்கில் அந்நியனை எடுக்குமாறு ஷங்கரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஷங்கரின் அந்நியனை முடித்தபிறகு விக்ரம் செய்யப் போகும் முதல் வேலை முடி வெட்டுவது (அப்புறம், சடை வளர்ந்து போச்சுய்யா..)அப்படியே ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பக்கம் ஓடப் போகிறாராம், ரெஸ்டுக்கு. அதை முடித்துவிட்டு அடுத்து விக்ரம் நடிக்கப் போவதுஇயக்குனர் பாலாஜி சக்திவேலின் படத்தின்.

முதலில் இருவரும் கைகோர்த்த சாமுராய் படம் தோற்றது. இப்போது காதல் படத்தின் மெகா வெற்றிக்குப் பின் விக்ரமுடன் கைகோர்க்கப்போகிறார் பாலாஜி சக்திவேல்.

கொசுறு: கோவை ஏரியாவில் அந்நியனுக்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் எல்லா படங்களுக்குமே கிராக்கி அதிகமாகியிருக்கிறதாம்.

விஜய் நடிக்கவுள்ள சிவகாசி படத்துக்கு இந்த ஏரியாவில் பேசப்படும் விலை ரூ. 1.75 கோடியாம். இந்தப் படத்துக்கு இன்னும் பூஜையேபோடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் சச்சின் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த விலை ரூ. 2 கோடியை தாண்டக் கூடும்என்கிறார்கள்.

அதே போல ஜெயம் ரவி நடித்துள்ள மழை படத்தை ரூ. 90 லட்சத்துக்கு விலை பேசியிருக்கிறார்கள் கோவை டிஸ்டிபியூட்டர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil