»   »  ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி வந்த அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்

ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி வந்த அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: உரிய ஆவணங்கள் இல்லாததால் நடிகை அனுஷ்காவின் வாகனத்தை பொள்ளாச்சியில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பாகுபலி 2 படத்தை அடுத்து அனுஷ்கா தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் பிரபாஸ் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Anushka's caravan seized in Pollachi

படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த படக்குழு வந்தது. அனுஷ்கா தனது கேரவனில் வந்தார். கேரவனை மறித்த பொள்ளாச்சி போலீசார் சோதனை செய்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் கேரவனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுஷ்காவின் கேரவன் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனுஷ்கா இந்த படத்தை அடுத்து மீண்டும் பிரபாஸ் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police have confiscated actress Anushka's vehicle in Pollachi as it doesn't have proper documents.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil