»   »  மதில்மேல் பூனை... படப்பிடிப்பில் யானை... நாயகி அலறல்!

மதில்மேல் பூனை... படப்பிடிப்பில் யானை... நாயகி அலறல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரபல நடிகர் அரவிந்த்சாமியின் தங்கை விபா ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'மதில் மேல் பூனை'.

படத்தை இயக்குபவர் பரணி ஜெயபால். செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

படம் குறித்து பரணி ஜெயபால் கூறுகையில், "படிக்கும் வயதில் சிறுவர்களுக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியர்களும் அமைந்து விட்டால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதில் ஏதேனும் ஒன்று தவறினால் அதன் விளைவு என்ன என்பதைத்தான் இப்படத்தின் கதையாக்கி இருக்கிறோம்.

படத்தின் இடைவேளைக்கு முன்னால் வரும் 20 நிமிடக் காட்சியை ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு அமைத்திருக்கிறோம். சிறுவர்கள் வாழ்க்கை, காதலர்கள் வாழ்க்கை என இரண்டு தளங்களில் பயணிக்கும் கதை இடைவேளையில் ஒன்றாக சந்திக்கின்றன. அப்போது பிரச்சினை எழுகிறது. அதன் முடிவு என்ன என்பதை படத்தின் இரண்டாம் பகுதி சொல்லும்.

இப்படத்தின் நாயகனாக விஜய் வசந்த, நாயகியாக புதுமுகம் விபா நடித்திருக்கின்றனர். காமெடிக்கு தம்பி ராமையா.

இது ஓர் ஆக்ஷன், திரில்லர் படமாகும். பரமக்குடி, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குறிப்பாக கேரள காடுகளில் இந்தப் படத்தை ஷூட் செய்த அனுபவம் மறக்கமுடியாதது.

ஒரு முறை நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தபோது யானைக் கூட்டம் வந்துவிட்டது. நாங்கள் காமிரா உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு, மரக்கூட்டத்தின் பின்னாள் ஒளிந்து கொண்டோம். கதாநாயகி விபா பயத்தில் அலறிவிட்டார். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றார்.

நல்ல வேளை.. யானைகள் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தபடி இருந்துவிட்டு, நகர்ந்துவிட்டன. நாங்கள் தப்பித்துவிட்டோம்," என்றார்.

ரேணிகுண்டா படத்தின் இசையமைப்பாளரான கணேஷ் ராகவேந்திரா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் நாயகி விபா கூறுகையில், "நான் சென்னை பொண்ணு. மாடலிங் பண்ணிட்டிருக்கும் போது கன்னடத்துல 'ஆட்டா' என்ற படம் பண்ணினேன். தமிழ்ல இதுதான் எனக்கு முதல் படம்.

எனது பெரியம்மா மகன் அரவிந்த் சாமி. அதாவது என் அண்ணன்தான் அரவிந்த் சாமி. 'நல்ல படமா பார்த்து பண்ணு. அதுவும் ஹார்ட் வொர்க் பண்ணு'ன்னு அண்ணன் சொன்னார்.

இப்படத்துல நான் ஒரு போல்டான ஹீரோயினா நடிச்சிருக்கேன். ஸ்டண்ட்டும் பண்ணியிருக்கேன். கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டில் ஒன்றரை மாசம் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த அனுபவமே ரொம்ப த்ரில்லிங்கா இருந்தது," என்றார்.

Read more about: tamil cinema, விபா, viba
English summary
Mathil Mel Poonai is the new movie directed by debutant Bharani Jayapal. Vibha, cousin of Aravindsamy play the female lead in the movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos