மாமாவும் மாப்பிள்ளையும் முதல் முறையாக.. போட்டோஸ் போட்ட நடிகர் அருண் விஜய்!

சென்னை : நடிகர் அருண்விஜய் அனைவரும் அசந்து போகும் அளவிற்கு கதைகளை பக்காவாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அக்னி சிறகுகள், சினம் ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக இணைந்து கிராமத்து பின்னணியில் நடித்து வருகிறார்.

கொரோனா இரண்டாவது அலைக்கும் முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு லாக்டவுனுக்குப் பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ள மகிழ்ச்சியில் படப்பிடிப்பு தள புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் ரசிகர்களுக்காக சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மூன்று பாகங்களை

மூன்று பாகங்களை

தன்னுடைய படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்க வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்து வரும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சிங்கம் மூன்று பாகங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் இணைந்து இயக்குனர் ஹரி பணியாற்ற இருந்தார். ஆனால் அது கைகூடாமல் போக இப்பொழுது அருண் விஜய்யுடன் இணைந்து கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

வில்லன் ரோலில்

வில்லன் ரோலில்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை தோல்விகள் சொல்ல முடியாத அளவிற்கு அவமானங்கள் என அனைத்தையும் சந்தித்து வெறித்தனமாக வெகுண்டெழுந்து தன்னுடைய படங்களின் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அருண் விஜய் முதல்முறையாக வில்லன் ரோலில் நடித்து இருப்பார். கட்டுமஸ்தான உடல் அசரவைக்கும் சண்டை காட்சிகள் மிரட்டலான வசனம் என அருண் விஜய்யின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடினர். என்னை அறிந்தால் சுமாரான வெற்றியைப் பெற்று இருந்தாலும் இந்த திரைப்படம் அருண் விஜய்யின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ஹிந்தியிலும் ரீமேக்

ஹிந்தியிலும் ரீமேக்

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் அருண்விஜய் நடித்து வருகிறார். மேலும் இவரது படங்கலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்த தடம் தெலுங்கில் ரெட் என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் ஆக பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது. குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திற்கு பார்டர் என டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பட்டையை கிளப்பியது இதில் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா ஜோடியாக நடிக்கிறார்.

மிகப்பெரிய ஓப்பனிங்

மிகப்பெரிய ஓப்பனிங்

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் அருண்விஜய் மிகத் தீவிரமாக செயல்பட்டு அடுத்தடுத்த கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை அள்ளி வருகிறது. புதுப்புது இயக்குனர்களும் அருண் விஜய்யை இயக்க காத்துக் கொண்டுள்ளனர். இப்பொழுது சினம், அக்னி சிறகுகள் ,பார்டர், பாக்சர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்க முதல் முறையாக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜோடியாக பிரியா பவானி சங்கர்

ஜோடியாக பிரியா பவானி சங்கர்

இயக்குனர் ஹரியும் நடிகர் அருண் விஜய்யும் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் இன்று வரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தனர். இப்பொழுது நேரம் கைகூட கிராமத்து களத்தில் தயாராகும் புதிய படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு தற்காலிகமாக அருண்விஜய் 33 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலைத் தொடங்குவதற்கு முன்பே இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மார்ச் மாதம் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலேயே கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவத் தொடங்கி படப்பிடிப்பு தடைபட்டு இப்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹரியின் படங்களைப் போலவே இப்படமும் குடும்பத்துடன் கண்டுகளிக்க கூடிய கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

பக்கா கிராமத்து ஆள்

பக்கா கிராமத்து ஆள்

இந்த நிலையில் அரசு மீண்டும் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்துள்ளதால் ஜூலை 28-ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் அருண் விஜய் இயக்குனர் ஹரியுடன் இணைந்து பணியாற்றும் படப்பிடிப்பு தள புகைப் படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அருண்விஜய் வேட்டி சட்டையுடன் பக்கா கிராமத்து ஆள் போலவே கெத்தாக உள்ளார். நீண்ட நாட்கள் கழித்து கிராமப்புற கதையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதோ உங்களுக்காக சில புகைப்படங்கள் என ரசிகர்களுக்காக புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X