Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அரண்மனை 3 ல் ஆர்யாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா!
சென்னை : இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வருகிறது அரண்மனை பாகம் 3.
ஆர்யா ஹீரோவாக நடித்திரக்க ராஷி கண்ணா, ஆண்ட்ரியா,சாக்ஷி அகர்வால் ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
அப்பாடா...
ஒரு
வழியா
தியேட்டரில்
ரிலீஸாகும்
டாக்டர்
படம்...
வெளியானது
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு!
இந்நிலையில் இப்படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் குறித்த முக்கியமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அடுத்தடுத்த பாகங்களாக
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கிறது அரண்மனை 3. தமிழில் எத்தனையோ பேய் படங்கள் வெளியாகி இருந்தாலும் அவை அனைத்தும் அடுத்தடுத்த பாகங்களாக உருவாவதில்லை. அந்த வகையில் காஞ்சனா படத்திற்கு பிறகு இப்போது அரண்மனை திரைப்படம் அடுத்தடுத்த பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் அள்ளியது. ஹன்சிகா மோத்வானி வினாய்,கோவை சரளா, சந்தானம் என பலர் நடித்திருக்க ஹாரர் கலந்த கலகலப்பான காமெடி பேய் படமாக இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

மூன்றாவது பாகம்
அரண்மனை முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரண்மனை இரண்டாவது பாகமும் வெளியாகி சக்கைபோடு போட்டது இதில் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார். இரண்டாவது பாகமும் வெற்றிபெற இப்பொழுது மூன்றாவது பாகம் தடபுடலாக தயாராகி வருகிறது. இந்த முறையும் அதே பார்முலாவில் ஹாரர் காமெடி திரைப்படமாக சுந்தர் சி இயக்கி வருகிறார். ஒரு சிறிய பாத்திரத்திலும் சுந்தர்சி நடித்துள்ளார்.

யு ஏ சான்றிதழ்
சிறிய சறுக்கலுக்கு பிறகு கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆர்யாவுக்கு கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது இந்நிலையில் அடுத்ததாக அரண்மனை 3 வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது . இப்படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஆர்யாவுக்கு பேய்
இந்நிலையில் இப்படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு பாகங்களில் பெண்களுக்கு பேய் பிடித்து இருக்கும் ஆனால் இப்பொழுது அரண்மனை பாகம் 3ல் ஹீரோவான ஆர்யாவுக்கு பேய் பிடித்திருக்கும். வழக்கமான படங்களை விட வித்தியாசமாக இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.