»   »  ஆசினுக்கு காய்ச்சல் - வேல் ஸ்டாப்!

ஆசினுக்கு காய்ச்சல் - வேல் ஸ்டாப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆசினுக்கு திடீரென காய்ச்சல் வந்து விட்டதால் சூர்யாவுடன் அவர் நடித்து வரும் வேல் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்தியில் அமீர்கானுடன் கஜினி ரீமேக்கில் நடித்து வருகிறார் ஆசின். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நமீபியாவில் நடந்தது. இதற்காக ஆசின் நமீபியா சென்றிருந்தார். படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கடந்த வாரம்தான் அவர் சென்னை திரும்பினார்.

அதன் பின்னர் சூர்யாவின் வேல் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஏவி.எம். ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வந்தது. செட்டில் ஆசின் மிகவும் களைப்பாக காணப்பட்டதால் இயக்குநர் ஹரி, டாக்டரை அழைத்தார்.

டாக்டர் வந்து பார்த்து விட்டு ஆசினுக்கு வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம் எனக் கூறினார். மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

3 நாட்கள் முழுமையான ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர் ஆசினை அட்வைஸ் செய்துள்ளார். இதனால், ஆசின் ஓய்வில் உள்ளார். திங்கள்கிழமைதான் அவர் படப்பிடிப்புக்கு வருவார் என்று தெரிகிறது.

இதற்கிடையே, தனது ஆப்பிரிக்க அனுபவம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடையே பகிர்ந்து கொண்டார் ஆசின். தென் ஆப்பிரிக்க கடலில் ஒரு மீனவர் தனது கண் முன்பாகவே பரிதாபமாக இறந்த சம்பவத்தை அவர் திகிலுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆசின் அதுகுறித்துக் கூறுகையில், நாங்கள் நமீபியாவில் கடற்கரையில் சில காட்சிகளை ஷூட் செய்தோம். மிகவும் அருமையான லொகேஷன் அது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மீனவர் கடலில் தத்தளித்தபடி மூழ்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தோம்.

அவரை மீட்க பலரும் முயற்சித்தனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எனது கண் முன்பாகவே அந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது ஒரு பயங்கரமான அனுபவம். அதை இப்போது நினைத்தாலும் கூட நடுங்கி விடுகிறேன் என்றார்.

ஒருவேளை இந்த பயம்தான் காய்ச்சல் வந்ததற்குக் காரணமோ என்னவோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil