For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அதர்வா கபடி வீரராக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் விறுவிறு வேகத்தில் தொடங்கியது!

  |

  சென்னை: 100 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சாம் ஆண்டன் உடன் இணைந்து பக்கா ஆக்சன் கதை களத்தில் நடிகர் அதர்வா நடித்து முடித்துள்ளார்.

  கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் சித்தார்த் நடித்த வேடத்தில் அதர்வா நடித்து தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார்.

  குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ், நவரசா என அதர்வாவுக்கு வரிசையாக படங்கள் வெளியாக இருக்க இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

  நவரசா ஆந்தாலஜி… கையில் துப்பாக்கியுடன்... ராணுவ வீரர் உடையில் கெத்தாக இருக்கும் அதர்வா !நவரசா ஆந்தாலஜி… கையில் துப்பாக்கியுடன்... ராணுவ வீரர் உடையில் கெத்தாக இருக்கும் அதர்வா !

  பக்கா என்ட்ரி

  பக்கா என்ட்ரி

  தமிழில் பானா காத்தாடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன அதர்வா ,பாலா படமான பரதேசி படத்தில் நடித்து பெரும் அளவில் பேசப்பட்டு ,புகழின் உச்சிக்கே சென்று விட்டார்.பல பட வாய்ப்புகள் கதவை தட்ட அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் .பிறகு சாக்லேட் பாயாக வளம் வந்து அதிரடி காட்டினார் .இமைக்கா நொடிகள் படம் இவருக்கு நல்ல பிரேக்கிங் பாயிண்டாக அமைந்தது.

   ஆக்ஷன் அவதாரம்

  ஆக்ஷன் அவதாரம்

  சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் அதர்வா இப்பொழுது ஆக்ஷன் அவதாரம் எடுத்து வருகிறார் . அந்த வகையில் தொடர்ந்து காதல் படங்களில் சாஃப்டான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் முதல் முறையாக சாம் ஆண்டன் இயக்கத்தில் 100 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார். சண்டைக்காட்சிகளில் அசால்டாக சம்பவம் செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்ததோடு அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் ஒப்பந்தமாகி தன்னுடைய திரைவாழ்க்கை இமேஜை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறார்.

  அந்தக் காலத்துக்கு ஏற்றவாறு

  அந்தக் காலத்துக்கு ஏற்றவாறு

  அந்தந்த காலகட்டத்து ட்ரெண்டிங்கு ஏற்றவாறு கதை ,நல்ல கதாபாத்திரம் உள்ள படமாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராக இருக்கிறார்.போலீஸ் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த காலத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து தன்னை மேம்படுத்திக்கொண்டார் .இப்பொது விளையாட்டு சார்ந்த படங்களுக்கு திரைத்துறையினரும் ,ரசிகர்களும் முக்கியத்துவம் தருவது தெரிந்து விளையாட்டு சார்ந்த படத்தை தேர்ந்தெடுத்து நடிக தயாராகிவிட்டார் நம்ம அதர்வா . தற்போது உள்ள இளம் நடிகர்களில் அதிக அளவு பெண் ரசிகர்களை அதர்வா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இரண்டாவது முறையாக

  இரண்டாவது முறையாக

  100 வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் மற்றுமொரு திரைப்படத்தில் நடிகர் அதர்வா நடித்து முடித்துள்ளார். இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைவதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க இந்த முறையும் படம் பக்கா ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  களவாணி

  களவாணி

  களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சர்குணம் நடிகர் தனுஷுக்கு நெருங்கிய உறவினர் ஆவார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான களவாணி மிகப்பெரிய வசூலை அள்ளியது. அதைத் தொடர்ந்து வகைசூடவா, நையாண்டி, சண்டி வீரன்,களவாணி 2 எனது தனது பாணியில் தொடர்ந்து படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இதில் 2015 இல் வெளியான சண்டி வீரனில் அதர்வா ஹீரோவாக நடித்திருந்தார்.

   அதர்வா கபடி வீரராக

  அதர்வா கபடி வீரராக

  இப்பொழுது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சற்குணம் அதர்வா கூட்டணி இணைய இந்த முறை கலகலப்பான குடும்ப கதையை சற்குணம் இயக்குகிறார். இந்தப் படத்தில் கபடி விளையாட்டு முக்கிய பங்கு வகிப்பதால் அதர்வா இதில் கபடி வீரராக நடிக்க தனியாக பயிற்சி பெற்று வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ராஜ் கிரண் ,ராதிகா சரத்குமார் ,ஜே பி, ஆர் கே சுரேஷ், சிங்கம்புலி, பாலா சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். அதர்வாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .அந்த லிஸ்டில் இந்த படமும் வரிசையில் நிற்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் .

  படப்பிடிப்பு விறுவிறு வேகத்தில்

  படப்பிடிப்பு விறுவிறு வேகத்தில்

  விளையாட்டை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்கள் சமீபகாலமாகவே அதிகமாக தமிழில் வெளியாவதோடு வெற்றி பெற்றும் வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது கபடி போட்டியை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று விறுவிறு வேகத்தில் தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக 50 நாட்களில் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

  முதல் கட்டமாக

  முதல் கட்டமாக

  முதற்கட்டமாக அதர்வாவுக்கும் ராஜ்கிரணுக்கும் இடையேயான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சற்குணம் பாதுகாப்பாக மாஸ்க் அணிந்துகொண்டு கையில் மைக் உடன் இருக்கும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. குடும்பப் பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். நடிகர் அதர்வாவுக்கு தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ், நவரசா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

  Read more about: atharva அதர்வா
  English summary
  Atharva's next movie shooting has begun. The movie is directed by Sargunam. Rajkiran is doing an important role in the movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X