»   »  ஸ்ரீகாந்த்-சாயா-பார்த்திபன்

ஸ்ரீகாந்த்-சாயா-பார்த்திபன்

Subscribe to Oneindia Tamil
Parthiban-Chayasingh

குற்றாலத்தில் நடிகர் பார்த்திபன், சாயாசிங் நடிக்கும் வல்லமை தாராயோ படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. படபிடிப்பின் இடைவெளியில் பார்த்திபன் கூறுகையில்,

வல்லமை தாராயோ படத்தின் கதையை ஒரு வரியில் கூறுவதென்றால் காதலனுக்கும், ஒரு நல்ல கணவனுக்கும் இடையே மாட்டிக் கொண்டு வெளியே வர வல்லமை கேட்கும் பெண்ணின் கதை.

கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறார். நீதிமன்றத்தில் அதற்கான காரணம் கேட்கும்போது கணவர் மிகவும் நல்லவர் என கூறுகிறார். இதில் காதலனாக ஸ்ரீகாந்தும், கணவராக நானும் நடிக்கிறோம்.

இந்த படத்தில் பெண் இயக்குனர் மதுமிதாவோடு பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண் இயக்குனர்களின் படத்தில் நடித்துள்ள நான் முதன் முறையாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் நடிக்கிறேன்.

ஆண்களை விட பெண்கள் திறமையானவர்கள். ஆனால் பெண்கள் ஆண்களுக்கு பின்னால் நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். பெண்கள் உயர்வதற்கு தடைகள் இருப்பதாக நினைக்கின்றனர். தடையிருந்தால் பி.டி.உஷா, சானியா மிர்சா போன்றவர்கள் சாதித்திருக்க முடியுமா. பெண்கள் தடையிருப்பதாக எண்ணிக் கொண்டு இருந்து விடக்கூடாது. சாதிக்க வேண்டும்.

திருட்டு விசிடி அதிகரித்து விட்டது. ரசிகர்கள் சினிமா உலகை வாழ வைப்பதாக எண்ணிக் கொண்டு இந்த விசிடிக்களை வாங்குகின்றனர். இந்த பணம் திருட்டு விசிடி கொள்ளை கும்பலுக்குதான் போகிறதே தவிர சினிமா தயாரிப்பாளருக்கு அல்ல.

ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தின் கதையை அப்படியே எடுத்ததால் கதைக்கு பஞ்சம் என்று கூறிவிட முடியாது. சினிமா என்பது ஒரு வர்த்தகம். இதில் இப்படிதான படம் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை எதுவும் இல்லை. பில்லா ஒரு வெற்றிகரமான படம் என்பதால் அந்தக்கதையை வைத்து பண்ணும்போது நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தனர்.

தற்போது எனது சொந்த தயாரிப்பில் வித்தகன் படத்திலும், செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் நடித்து வருகிறேன். சினிமாவில் கதாநாயகர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே நடிக்கின்றனர். வசதி வந்ததும் நடிகர்களின் அடுத்த தேடுதல் அரசியலாக உள்ளது என்றார் பார்த்திபன்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil