»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாள் கவர்ச்சிப் புயல் அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ (பிரன்ட்ஸ் படத்தில் வருகிறாரே அவர்தான்),சுமித்ராவின் மகள் உமாவும் (கடல் பூக்கள் படத்தில் வரப் போகிறாரே அவரேதான்) இணைந்து கலக்கும் ஐஸ்வர்யாபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.

கே.வி.குணசேகரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தையும் அவரே இயக்கவிருக்கிறார். இரட்டைகதாநாயகிகள் உள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளர், சின்னத்திரையின் ஏ.ஆர்.ரஹ்மான் என்றுஅழைக்கப்படும் தினா.

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் (இங்கதாங்கோ, ராஜகுமாரன், தேவயானி காதல்பிறந்ததாம்!), 7-ம் நடந்த பூஜையில் தமிழ் சினிமாத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர்,விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil