»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் "பாபா" படத் தொடக்க விழா ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்திற்கு மத்தியில் கடந்தஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24, 2002) தொடங்கியது.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி நடிக்கும் புதிய படம் "பாபா". ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டஅனைத்துத் தரப்பினரும், அடுத்த ரஜினி படம் எப்போது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்இந்தப் பட அறிவிப்பு வெளியானது.

"பாபா" படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். ஆங்காங்கே"பாபா"வுக்கு வரவேற்பு கொடுத்து பேனர்கள், போர்டுகள் வைக்கத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை "பாபா" படத்தின் பூஜை நடந்து, அதன் பின் உடனடியாகப் படப்பிடிப்பும்தொடங்கியது.

அன்று அதிகாலையில் பாரிமுனை காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்ற ரஜினிகாந்த் அங்கு பயபக்தியுடன்அம்மனை தரிசித்தார். சில வாரங்களுக்கு முன்பும் இதே கோவிலுக்கு ரஜினி வந்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ரஜினி கோவிலுக்கு வருவது குறித்த அறிந்த ரசிகர்கள், அந்த அதிகாலை நேரத்திலும் நூற்றுக்கணக்கில் கூடி நின்றுரஜினியை வாழ்த்தி வரவேற்றனர். ரஜினியின் பாதுகாவலர்களையும் மீறி அவரைத் தங்களது தோள்களில் தூக்கிஆரவாரித்தனர்.

அவர்களிடமிருந்து மீண்ட ரஜினி பின்னர் பூஜை நடந்த ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு கிளம்பினார். அங்குதிரையுலகப் பிரமுகர்கள் பலர் திரண்டிருந்தனர்.

தனது குருவான கே. பாலசந்தரின் காலில் விழுந்து ரஜினி ஆசி வாங்கிய பின்னர் பூஜை+படப்பிடிப்புதொடங்கியது. விநாயகர் கோவில் முன்பு ரஜினி தேங்காய் உடைப்பது போல முதல் காட்சி படமானது.

ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் கிளாப் அடிக்க, இந்தக் காட்சியை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.சோட்டா நாயுடு இந்தக் காட்சியை அப்படியே கேமராவுக்குள் அடக்கிக் கொள்ள "பாபா"வின் முதல் காட்சி "டேக்"ஓ.கே. ஆனது.

இக்காட்சி முடிந்ததும், பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், பஞ்சு அருணாச்சலம், சோ ஆகியோர் ரஜினிக்குகை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

"பாபா" பூஜைக்குப் பிறகு மற்ற படப்பிடிப்பு காட்சிகள் கிண்டி கேம்பகோலா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தஅரங்குகளில் நடந்தன.

"பாபா" படப்பிடிப்பிலே...

ரஜினியுடன் "பாபா" படத்தில் நடிக்கவுள்ள ஜப்பானிய நடிகை யாஷி மெர்லி ஜுகியும் படப்பிடிப்பில்கலந்துகொண்டார். ஜப்பானியப் பெண்ணாக இருந்தாலும் நம்மூர் பெண் போல வெட்கம் முகத்தில் தாண்டவமாடஉற்சாகத்துடன் காணப்பட்டார்.

"வருங்கால முதல்வர்", "ரஜினி பாபா" என்ற வாசகங்கள் அடங்கப்பட்ட பேனர்கள், ஏவி.எம். ஸ்டுடியோ, கிண்டிகேம்பகோலா மைதானம், காளிகாம்பாள் கோவில் பகுதியில் அதிகம் காணப்பட்டன.

"வருங்கால முதல்வரே" என்று ரசிகர்கள் வாழ்த்தி கோஷமிட்ட போதெல்லாம் புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துகும்பிட்டார் ரஜினி.

இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி பட பூஜையைப் பார்க்க ரசிகர்கள் ஸ்டுடியோவுக்குள் ஏராளமான அளவில்அனுமதிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் கட்டுப்பாடு அதிகம் இல்லாமல் இருந்ததும் ரசிகர்களைப் பெரும்உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ரசிகர்கள் அவ்வப்போது கோஷமிடும் போதெல்லாம், "பாபா" படத்தில் ரஜினி செய்வதுபோல வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி காண்பித்த வண்ணம் இருந்தனர்.

பூஜை நடந்த வடபழனி, படப்பிடிப்பு நடந்த கிண்டி ஆகிய பகுதிகளில் ரஜினி ரசிகர்களின் கூட்டத்தால்போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

முதல் காட்சி படப்பிடிப்பின்போது நகைச்சுவை நடிகர் செந்தில் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். செந்தில்அய்யப்ப பக்தர் வேடத்திலும், ரஜினி காந்த், தொழிலாளி வேடத்திலும் நடித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil