»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

பாபா படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மைசூர் கிளம்பிச் சென்றார்.

ரஜினி காந்த் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் பாபா படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படம்வெளியாகவுள்ளது. சென்னையில் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் பாடல் காட்சிகளைப் படம் பிடிப்பதற்காகஸ்விட்சர்லாந்துக்கு கடந்த 12ம் தேதி கிளம்பிச் சென்றனர்.

ரஜினி, மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் அங்கு படம் பிடிக்கப்பட்டன. இந்தப் பாடலில் மனீஷா மிக செக்ஸியாக ஆட்டம்போட்டிருக்கிறாராம். பத்து நாட்களுக்கு அங்கு பாடல் காட்சிகள் சுடப்பட்டன. அதன்பிறகு மனீஷா கொய்ராலா அங்கிருந்து நேரடியாக மும்பைபறந்தார். ரஜினி உள்ளிட்ட மற்றவர்கள் சென்னை திரும்பினார்கள்.

சென்னை திரும்பிய படக்குழுவினர் அன்று இரவே மைசூர் கிளம்பிச் சென்றனர். மைசூரில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு இன்று (26.05.02) ஆரம்பிக்கிறது.இதற்காக ரஜினி இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் வழியாக மைசூர் சென்றார். சுமார் 20 நாட்களுக்கு மைசூர் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. படைப்பாவின் பல காட்சிகள் மைசூர் சுற்றுப்புறங்களில்தான் நடந்தது. அதே இடங்களில் பாபா படப்பிடிப்பும்நடைபெறவுள்ளதாம். செண்டிமென்ட் என்கிறார்கள்.

ரஜினி படங்களின் படப்பிடிப்பு அவரது சொந்த ஊரான கர்நாடகத்தில் நடைபெறாமல் முற்றுப் பெறாது. சென்னையிலேயே படப்பிடிப்பு முழுவதும் நடைபெறப்போவதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் இப்போது கர்நாடகத்திற்குள் நுழைந்து விட்டார் ரஜினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil