»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "பாபா" படத்திற்காக சென்னையில் ரூ.1 கோடி மதிப்பில் செட்அமைக்கப்பட்டுள்ளது.

"பாபா" படப்பிடிப்பு 24ம் தேதி காலை வடபழனி ஏவி.எம். ஸ்டுடியோ விநாயகர் கோவிலில் பூஜையுடன்ஆரம்பமாகிறது. கோவில் முன்பு ரஜினிகாந்த் தேங்காய் உடைப்பது மாதியான காட்சி முதலில் படமாக்கப்படுகிறது.

அதன் பிறகு கிண்டி கேம்ப கோலா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் காட்சிகள்படமாக்கப்படவுள்ளன.

இந்த மைதானத்தில் பல்வேறு குட்டி குட்டி செட்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகள், மார்க்கெட், கடைகள், பள்ளிஆகியவை இந்த செட்களில் இடம் பெற்றுள்ளன.

கலை இயக்குநர் ஜி.கே. வடிவமைத்துள்ள இந்த செட்களுக்கான செலவு ரூ.1 கோடியாம்.

வழக்கமாக தமிழகத்தை விட்டு கர்நாடகம் அல்லது ஆந்திராவில்தான் ரஜினி படங்களின் பெரும்பாலான காட்சிகள்படமாக்கப்படும். ஆனால் இந்த முறை வித்தியாசமாக துவக்க காட்சிகளே சென்னையிலேயேபடமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரஜினி படத்தின் ஷூட்டிங், அதிலும் சென்னையில் நடைபெறவுள்ளதால்ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய் விடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகளை நிர்வாகத் தயாரிப்பாளர் துரை மேற்கொண்டு வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil