»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேது, நந்தா என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த பாலா, அடுத்த படத்தை தனது முதல் இரு படங்களின் நாயகர்களை வைத்து இயக்கப்போகிறார்.

"சிய்யான்" விக்ரம், "நந்தா" சூர்யா ஆகிய இருவரும்தான் பாலாவின் அடுத்த படத்தில் நாயகர்கள். இந்தப் படத்தை வி.ஏ.துரை தயாரிக்கப்போகிறார் (சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபாவையும் இவர்தான் தயாரிக்கிறார்).

விக்ரம், சூர்யா ஆகிய இருவருக்கும் ஏற்ற மாதிரியான கதையுடன், வித்தியாசமான பின்னணியில் தனது ஸ்டைலில் இயக்கப் போகிறாராம்பாலா. மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பாகிறது.

சார் ... டிக்கெட் !

12-பி படம் வந்தாலும் வந்தது, அடுத்து ஒரு படம் வருகிறது. அதற்குப் பெயர் சுந்தரா டிராவல்ஸ் என்று வைத்துள்ளனர்.

பஸ்களின் பெயர்களை வைப்பது தமிழ் படங்களுக்குப் புதிதல்ல. மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, டவுன் பஸ் என்று அப்போதே படங்கள் வந்துவிட்டன. அந்த வரிசையில் இப்போது மீண்டும் பஸ்களைப் பிடிக்க ஆரம்பித்து விட்டனர் நமது தயாரிப்பாளர்கள்.

மூளையை கசக்கி பெயர் வைப்பது எல்லாம் அந்தக் காலம். இப்போது வாயில் எது வருகிறதோ அதுதான் டைட்டில். 12-பி என்று ஒரு படம்எடுத்தவுடன் அதே ரகத்தில் இப்போது இன்னொரு படத்திற்கும் டைட்டில் வைத்துள்ளார்கள். சுந்தரா டிராவல்ஸ் என்று அதற்குப் பெயர்.முரளியும், புதுமுகம் ராதாவும் இதில் ஜோடி சேருகிறார்கள்.
மேலும் பல தயாரிப்பாளர்கள் பஸ் சம்பந்தப்பட்ட பல டைட்டில்களை ரிஜிஸ்டர் செய்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

விஜய்காந்த்- விக்ரமன் மீண்டும் கூட்டணி:

கேப்டன் விஜயகாந்த்தின் ராஜ்ஜியம் முடிவுறும் தருவாயில் உள்ளது. அடுத்த படத்திற்கான வேலை இப்போதே ஆரம்பமாகி விட்டது.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்படவுள்ளதாம். இதே பேனரில்தான் வல்லரசு, நரசிம்மா ஆகிய இருபடங்களும் தயாரிக்கப்பட்டன.

புதிய படத்தை விக்ரமன் இயக்குவார் என்று தெரிகிறது. கிராமத்துப் பின்னணியுடன் கூடிய கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.விக்ரமனுடன் கேப்டன் இணைந்து பணியாற்றிய வானத்தைப் போல, தேசிய விருதுபெற்றதுடன், சூப்பர் ஹிட்டாகவும் ஓடியது என்பதைமறந்து விட முடியுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil