»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

இயக்குனர் பாலா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். சேதுவுக்குக் கிடைத்த அதே வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கூட நந்தா நன்றாகபேசப்படுவதால் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். சேது எப்படி லேட்டாக பிக்--அப் ஆனதோ, அதேபோலவே நந்தாவும் தாமதமாகவாவதுதிரையுலகைக் கலக்கும் என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் தரப்பிலும் ரொம்ப சந்தோஷமாம். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜியர்களாக வெற்றி பெற்ற இளைஞர்கள் தான் இந்தப்படத்தைத் தயாரித்தார்கள். அவர்களின் முதல் படைப்பே ஹிட் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அந்த சந்தோஷத்தை பாலாவுடன் குஷாலாக கொண்டாட நினைத்தவர்கள், பாலாவை விமானத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு, தாங்கள்குடியிருக்கும் அமெரிக்காவுக்குத் தள்ளிக் கொண்டு போயுள்ளார்கள்.

நந்தா படத்தைத் தொடங்குவதற்கு முன்பும் பாலாவை அமெரிக்காவுக்கு அழைத்துப் போய் தான் கதை டிஸ்கஷன் செய்தார்கள். இப்போதுபாலாவை மீண்டும் அழைத்துச் சென்றுள்ளதால், அடுத்த படத்தையும் இவர்களுக்கே பாலா செய்யலாம் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil