»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய காதல் கதையை கையில் எடுக்கிறார் பாலு மகேந்திரா. அவருடன் இந்த முறைகைகோர்த்திருப்பவர் ஜெயராம்.

ராமன் அப்துல்லா என்ற படத்திற்குப் பிறகு பாலு மகேந்திரா பெரும் அமைதி காத்து வருகிறார். இந்து-முஸ்லீம்பெயர் கொண்ட அந்தப் படம் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்கமுடியாது.

அந்தப் படத்தையொட்டித் தான் தமிழ் சினிமாவே இரண்டாக உடையும் அளவுக்கு பல பிரச்சினைகள் எழுந்தன.சினிமா தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்சி உடைந்தது, தமிழன் என்ற உணர்வு தமிழ் சினிமாவில் எழுந்ததுஎல்லாம் அப்போதுதான், அதைத் தொடர்ந்து படைப்பாளிகள் சங்கம் பிறந்தது. நிற்க.

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கதையை கையில் எடுத்துள்ளார் பாலு மகேந்திரா. இதற்கு ஜூலி கணபதிஎன்று பெயரிட்டுள்ளார். வழக்கமான காதல் கதைதான் இதுவும் என்றாலும் பாலுமகேந்திராவின் படம் என்பதால்எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

பாலுமகேந்திராவின் படங்களுக்கு ஸ்பெஷல் இசை வழங்கும் இசைஞானி இந்தப் படத்துக்கு ஆறு அட்டகாசமானபாடல்களைப் போட்டுத் தந்துள்ளார். பாடல்களை முத்துலிங்கம், மேத்தா, பழனிபாரதி எழுதியுள்ளனர்.

கணபதியாக ஜெயராம் நடிக்க, ஜூலியாக நடிக்கவிருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர்கள் தவிர சரிதாவுக்கும்முக்கிய ரோல் தரப்பட்டுள்ளது.

ஷூட்டிங் தொடங்கி சப்தமில்லாமல் நடந்து வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil