»   »  தனுஷ் அம்மா பானுபிரியா!

தனுஷ் அம்மா பானுபிரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் முன்னணி ஹீரோயினாக கொடி கட்டிப் பறந்த பானுப்பிரியா இப்போது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க வருகிறார்.

அப்போதைய முன்னணி ஹீரோக்களான பெரிசுகள் பிரபு, சத்யராஜ், கார்த்திக் ஆகியோர் உள்பட பலருடனும் பல படங்களில் கலக்கியவர் கொடியிடை பானுப்பிரியா. ஆனால், கல்யாணம், பிரிவு, மீண்டும் இணைவு என வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்தித்தார்.

இப்போது சிக்கல் எல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில் தெலுங்கில் மகா பிஸியான நடிகையாகிவிட்டார். அம்மா, செகண்ட் ஹீரோயின், அத்தை, அக்கா என ஒரு வேடத்தையும் விடாமல் எல்லா வாய்ப்புகளையும் அள்ளிப் போட்டு நடித்து வரும் பானு இப்போது தமிழுக்கும் வருகிறார்.

பொல்லாதவன் படத்தில் தனுஷின் அம்மா கேரக்டரில் நடிக்கிறார்.

இது குறித்து பானு கூறுகையில், நல்ல கேரக்டர் என்பதால் ஒப்புக் கொண்டேன். அம்மா வேடம் என்றால் சும்மா வந்து போகும் கேரக்டராக இல்லாமல், நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்தது.

தெலுங்கில் போன வருடம் சத்ரபதி என்ற படத்தில் அம்மா கேரக்டரில் நடித்தேன். அந்த படத்தில் என்னுடைய கேரக்டருக்காக நந்தி விருது கிடைத்தது என்றார்.

பானுப்பிரியாவின் மகள் பெயர் அபிநயாவாம். குழந்தையைப் பார்த்துக் கொள்ளவே நேரம் போதவில்லையாம். இதனால் தான் சினிமாவில் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் ஏற்க முடியவில்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil