»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

டைரக்டர் பாரதிராஜா எடுத்து வரும் கண்களால் காதல் செய் படத்திற்கு ஒருவழியாக இசையமைப்பாளரை முடிவு செய்துவிட்டார்கள்.

முதலில் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை புக் செய்ய பாரதிராஜா நினைத்திருந்தார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தேவாவைப்போட முடிவு செய்தார்.

ஆனால் அந்த முடிவையும் இப்போது மாற்றிக் கொண்டு விட்டாராம். கடைசியாக கிடைத்த தகவலின்படி ஏ.ஆர்.ரஹ்மான்தான் படத்திற்குஇசையமைக்கவுள்ளாராம்.

முதலிலேயே ரஹ்மானை புக் செய்யாததற்குக் காரணம் வைரமுத்துவாம். பாபா படத்தில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் (வைரமுத்துவின் ஒருபாடல், பதிவு செய்யப்பட்ட பிறகு ரஹ்மானால் நிராகரிக்கப்பட்டதாம்) ரஹ்மானுடன் சேர்ந்து பணியாற்ற தயங்கினாராம் வைரமுத்து.

அவரை சமாதானப்படுத்திய பாரதிராஜா, ரஹ்மானுடைய இசைக்கு பாட்டு எழுத அவரது சம்மதத்தைப் பெற்றாராம். அதன் பிறகே ரஹ்மானைஅணுகினாராம்.

கண்களால் கைது செய் கிராமத்துக் கதை அல்ல. டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் மாதிரி முற்றிலும் நகரத்தை மையமாக வைத்த சப்ஜெக்டாம்.

ஒரு பணக்கார வாலிபனின் தந்தை திடீரென இறக்க அவன் தலையில் தொழிற்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பும் பல கோடி சொத்துக்களும் வந்துவிழ அதை அந்த வாலிபன் சமாளிக்கப் படும் பாடு, அவனது மெல்லிய காதல் ஆகியவை தான் கதையின் கருவாம்.

Please Wait while comments are loading...