»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கூத்துப் பட்டறை என பெயரிடப்பட்ட பின்னர் எல்லாமே டிராமா தான் என்று மாற்றப்பட்ட படத்தில் நடித்துவரும் மலையாள நடிகை நவ்யா நாயர் தீவிரமாக தமிழ் பயின்று வருகிறார்.

இந்தப் படத்தைத் தயாரித்துஇயக்கும் பிரகாஷ் ராஜ், நவ்யாவே தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டது தான் இதற்குக் காரணம்.

நம் ஊர் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கிரண்களையும் சிம்ரன்களையும் கொண்டு வந்து டப்பிங் மூலம்பேச வைத்து ஒப்பேற்றி வரும் நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்தவரான பிரகாஷ் ராஜ், தன்னால் தமிழில்அறிமுகப்படுத்தப்படும் நடிகை தமிழிலேயே பேச வேண்டும் என்று முயற்சி எடுத்திருப்பது மிகவும்பாராட்டுக்குரியது.

தயாரிப்பாளரே சொல்லிவிட்டதால், ஆள் வைத்து தமிழ் டியூசன் படித்து வருகிறார் நவ்யா.

மேலும் அவருக்குபிரகாஷ் ராஜூம் தமிழ் சொல்லித் தருகிறார்.

தமிழில் பொளந்து கட்டும் பிரகாஷ் ராஜூக்கு கன்னடம் தவிர இந்தி, தெலுங்கு, துளு, கொங்கனி, மலையாளம்என சகல பாஷைகளும் தெரியும்.

* மணிரத்னத்தின் படத்தில் நடித்து வரும் திரிஷாவுக்கு அடுத்த லக் அடித்துள்ளது. ஷங்கர் அடுத்ததாக இயக்கஉள்ள படத்தில் ஹீரோயினாக புக் ஆகியுள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தின்ஹீரோ விக்ரம். விக்ரம் ரெக்கமெண்டேசனில் தான் திரிஷாவுக்கு சான்ஸ் தரப்பட்டதாக சொல்கிறார்கள்.

பாய்ஸ் தோல்வியைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளத்தில் பெரும் பகுதியைவெட்டிவிட்டாராம் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அடி மேல் அடி என்பார்களே. அது இது தானா?

* விக்ரம் குறித்து இன்னொரு செய்தி. விக்ரமையும் சூர்யாவையும் வைத்து பிதாமகன் படத்தை எடுத்து வரும்இயக்குனர் பாலா, தான் அடுத்து எடுக்கப் போகும் படத்திலும் விக்ரமையே ஹீரோவாகப் போட முடிவுசெய்துள்ளாராம். படத்தின் கதை குறித்து வழக்கம் போலவே மெளனம் காக்கிறார் பாலா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil