»   »  "குட்கேர்ள்" பிபாஷா

"குட்கேர்ள்" பிபாஷா

Subscribe to Oneindia Tamil
பிபாஷா பாசுவின் கால்ஷீட் ரேட் ரொம்ப காஸ்ட்லி என்றாலும், அவரது குணம் ரொம்பத் தங்கம் என்கிறார்கள் சச்சின்யூனிட்காரர்கள்.

விநியோகஸ்தர்களின் ஹீரோ என்ற அந்தஸ்தை விஜய் மீண்டும் பெற்றுவிட்டார். திருமலை, கில்லி படங்களின் மூலம்விநியோகஸ்தர்களின் வங்கிக் கணக்கை கணிசமாக ஏற்றினார் விஜய்.

அடுத்த வந்த மதுர, திருப்பாச்சி முந்தைய படங்கள் போல் மாபெரும் வெற்றியைப் பெறாவிட்டாலும் வசூலில் ஏமாற்றவில்லை.

இதனால் இப்போது ஹரிணியுடன் அவர் நடிக்கும் சச்சின் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படப்பிடிப்பு முற்றிலும் முடிவடையாத நிலையில் பெரும்பாலான ஏரியாக்கள் இப்போதே விற்றுத் தீர்ந்து விட்டனவாம்.

கிட்டதட்ட ரூ.15 கோடிக்கு படம் பிஸினஸ் ஆகியுள்ளதாம். இதனால் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பயங்கர சந்தோஷத்தில்இருக்கிறார்.

இந்தப் படத்தில் பிபாஷா பாசு செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார். கலைப்புலி தாணு செலவுக்குக் கவலைப்படாத தயாரிப்பாளர்ஆயிற்றே.

பிபாஷாவுக்கு சரியான சம்பளம் கொடுத்து படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். இந்தப் படத்தில் பிபாஷாவுக்கு சின்னரோல்தானாம். ஆனாலும் அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? 30 லகரமாம்.

அசந்து போனாலும், என்ன விலையானாலும் சரி, படத்திற்குக் கண்டிப்பாக பிபாஷா தேவை என்று முடிவு செய்த தாணு, ஓ.கே.என்று சொல்லி பிபாஷைவை கோலிவுட்டுக்கு இழுத்து வந்துள்ளார்.

ரேட்தான் பெரிசு, ஆனாலும் பிபாஷா ரொம்ப நல்ல பிள்ளை என்கிறார்கள் சச்சின் பட யூனிட்டார். சரியான நேரத்திற்கு வந்துசெல்கிறார், கவர்ச்சி விஷயத்தில் கறார் காட்டுவதில்லை, ரொம்ப பந்தா இல்லை என்று பிபாஷா புகழ் பாடுகிறார்கள்.

அது சரி, ஷூட்டிங் காலை 10 மணிக்கு என்றால் அடுத்த நாள் காலை 10 மணிக்கு வந்து நிற்கும் மற்ற மும்பை வரவுகளைப்பார்த்து வெறுத்துப் போன நம்ம ஆட்களுக்கு பிபாஷா சொன்ன நேரத்திற்கு வந்து சென்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

பிபாஷாவும் வாங்கின காசுக்கு கொஞ்சம் கூட வஞ்சகமே இல்லாமல் இயக்குநர் கேட்பதை கூடுதலாக போட்டுக் கொடுத்து அசத்திவருகிறாராம்.

இந்தப் படத்தை இயக்குவது இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் என்பது நமது வாசகர்களுக்குத் தெரிந்த செய்தி. அப்பாவின்பெயரை ஜான் காப்பாற்றி விடுவார் என்று சூட்டிங் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

படம் வருகிற தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) ரிலீஸ் ஆகிறது.

Read more about: ramya, cinema, actress, bipasha, ‘sachin’

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil