»   »  சத்யராஜுடன் நடிப்பதில் பாபிலோனா சாதனை

சத்யராஜுடன் நடிப்பதில் பாபிலோனா சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மார்க்கண்டேயன் சத்யராஜுடன் தொடர்ந்து நடித்து கவர்ச்சி சூறாவளி பாபிலோனா சாதனை படைத்து வருகிறார்.

வயதை மீறிய வாலிபத்துடன் வலம் வந்தவர் சிவக்குமார். நவீன மார்க்கண்டேயன் என்றும் வர்ணிக்கப்பட்டவர்.அந்த அடைமொழியை தற்போது சத்யராஜ் தட்டிப் பறித்துள்ளார். தலையில் விக்கை மாட்டினோமா, சின்ன சின்னகுட்டிகளுடன் கட்டிப் பிடித்து டான்ஸ் ஆடினோமா என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மகன் சிபிராஜை முன்னுக்குக் கொண்டு வருவதற்காக அவருடன் சேர்ந்து ஜோர் படத்தில் நடித்தார் சத்யராஜ். படம்ஓரளவு கல்லாப் பெட்டியை நிறைத்தது. உடனே சிபிராஜுக்கு வாய்ப்புகள் குவிந்திருக்க வேண்டும் இல்லையா?

அதுதான் நடக்கவில்லை. சத்யராஜூக்குத்தான் வாய்ப்புகள் வந்தன. அதுவும் கையில் பிடிக்க முடியாத அளவுக்குபுதுப்பட வாய்ப்புகள். அக்கடா என்று ரிடையர்மெண்ட் வாங்கும் வயதில் வந்திருக்கும் இந்த வாய்ப்புகளால்சத்யராஜ் சற்று உற்சாகமாகவே இருக்கிறார்.

பின்னே ஒவ்வொரு படத்திலும் கவர்ச்சி நாயகிகளுடன் சேர்ந்து ரெளசு பண்ணுகிற வேடம் என்றால் கசக்கவாசெய்யும்? நமீதா, மும்தாஜ், பாபிலோனா, அல்போன்ஸா என்று கோலிவுட்டின் அத்தனை கவர்ச்சி ஊறுகாய்களும்இவரது படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் பாபிலோன சத்யராஜுடன் சேர்ந்து நடிப்பதில் சாதனையே படைத்து வருகிறார். சத்யராஜுடன் இணைந்துஇதுவரை 9 படங்களில் நடித்துள்ளாராம் பாபிலோனா.

சமீப காலத்தில், ஒரு கவர்ச்சி நடிகை, ஒரு ஹீரோ நடிகருடன் இந்த அளவுக்கு அதிகமான படங்களில்நடித்ததில்லையாம். அந்த சாதனையை பாபிலோனா படைத்துள்ளார் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

தற்போது சத்யராஜுடன் மகா நடிகன், அய்யர் ஐ.பி.எஸ். என இரு படங்களில் நடித்து வருகிறார் பாபிலோனா.கவர்ச்சி காட்டுவதில் தப்பே இல்லை என்று மார் தட்டிச் சொல்லும் பாபிலோனா, சமீபத்தில் தனது பெயர்பத்திரிகைகளில் அடிபட்டதையும், தனது கணவர் கொடுத்த புகார் குறித்தும் ஏதாவது கேள்வி கேட்டால் ஸாரிஅதை மட்டும் கேட்காதீர்கள் என்று கூறி விடுகிறார்.

வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிக்கு அடிக்கடி சென்று விட்டதால், படங்களில் அதிகம் கவனம் செலுத்த முடியாமல்போய்விட்டது. இனி வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளைக் குறைத்துக் கொண்டு, படங்களில் அதிக கவனம்செலுத்தவிருக்கிறேன் முழு கவனமும் படங்களில் நடிப்பதிலேயே இருக்கும் என்று கூறும் பாபிலோனா,

இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், துபாய், இலங்கை என தமிழர்கள் வாழும்எல்லா நாடுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன்தான் இத்துறைக்கு வந்தாகக் கூறும் பாபிலோனா,எதிர்பார்த்தபடி எனக்கு வாய்ப்புக்கள் அமையவில்லை. கவர்ச்சியான வேடங்களில் நடிக்கவே என்னைஅழைத்தார்கள். எனக்கு இதில் வருத்தமில்லை.

கவர்ச்சியில் சில்க், ஜெயமாலினி போன்று எத்தனையோ நடிகைகள் சாதனை படைத்திருக்கிறார்கள். அந்தவரிசையில் எனக்கும் நல்ல புகழ், பெயர் கிடைத்துள்ளது. ஆனால் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும்நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்கிறார்.

கவர்ச்சி காட்டுவதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன், அத்தோடு காமெடி வேடத்திலும் நடிக்கப் பிடிக்கும்என்று கூறும் பாபிலோனா, அய்யர் ஐ.பி.எஸ். படத்தில் ஒரு பாட்டுக்கு அபிநயாஸ்ரீ, அல்போன்ஸாஆகியோருடன் சேர்ந்து கவர்ச்சி களேபரம் செய்துள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil