»   »  பாலிவுட் ஷூட்டிங் ஸ்பாட்டாக விஸ்வரூபமெடுத்த குஜராத்தின் "ரான் ஆப் கட்ச்"

பாலிவுட் ஷூட்டிங் ஸ்பாட்டாக விஸ்வரூபமெடுத்த குஜராத்தின் "ரான் ஆப் கட்ச்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூஜ்: பாலிவுட் படங்களின் ஷூட்டிங் லொகேஷன்களாக குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன.

குஜராத் மாநிலத்தில் உள்ள குட்ச், பனஸ்கந்தா, பதான் மாவட்டங்கள் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன.இதில் கட்ச் மாவட்டம் அபரிமிதமான இயற்கை வளங்களுடன் திகழ்கிறது.

அழகான கடற்கரை, ஆடம்பரமான மாளிகைகள், கண்ணைக் கவரும் கிராமங்கள், பழங்குடிகள் என பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன..

Bollywood film shooting in Kutch Area

குறிப்பாக ரான் ஆப் கட்ச் எனப்படும் சதுப்புநிலப் பகுதி, கோடைகாலங்களில் பெரும் பாலைவனமாக காட்சி தரும்.. இந்த பகுதி நிலவொளியின் பேரழகில் பெரும் சொர்க்கபுரியாக காட்சி தரும். இதற்காக ஆண்டுதோறும் ரான் ஆப் கட்ச் திருவிழாவை குஜராத் அரசு நடத்துகிறது.

முன்பைவிட பாலிவுட் படங்களை இந்தப் பகுதிகளில் படம் பிடிக்க இந்தி இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் ஹிருத்திக்ரோஷன் நடிப்பில் உருவாகிவரும் 'மொகஞ்சதாரோ' படத்தின் படப்பிடிப்பு கட்ச் பகுதியில் நடைபெற்றது.

Bollywood film shooting in Kutch Area

மொகஞ்சதாரோவைத் தொடர்ந்து சன்னி லியோன்-அர்பாஸ் கான் நடிக்கும் 'தேரா இண்டேசர் மெய்ன்' படத்தின் படப்பிடிப்பு இங்கே நடைபெறவிருக்கிறது.

இதற்காக சன்னி லியோன்-அர்பாஸ் கான் இருவரும் விரைவில் இங்கே வந்து தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். பாலிவுட் படங்களால் கட்ச் பகுதிகள் மேலும் கூடுதல் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Nowadays Gujarat and Surrounding Areas Changed Bollywood films shooting locations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil