»   »  சிறுசா கொடுங்களேன் ...

சிறுசா கொடுங்களேன் ...

Posted By:
Subscribe to Oneindia Tamil

குத்து வரிசைப் பாடல்களுக்கு புது இலக்கணம் படைத்து விடுவார் பூமிகா என்று கோலிவுட்டில் படு குஷியாக கூறி வருகிறார்கள்.

இந்த பூமிகா, அந்த பூமிகா அல்ல. ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்று ஸ்ரீகாந்த் சொக்கிப் போய் பாடிய பூமிகா இப்போது தமிழ் சினிமா பக்கமே காணோம். ஆனால் அவரது பெயரில் வந்துள்ள இன்னொரு பூமிகா, பூமித் தாய்க்கே கலக்கத்தைக் கொடுக்கும் அளவுக்கு கதி கலக்கும் கிளாமர் பாவையாக கோலிவுட்டுக்கு விசிட் அடித்துள்ளார்.

தொடக்கம் என்ற படத்தில்தான் இந்த பூமிகாவின், குத்துப் பாட்டு இடம் பெற்றுள்ளது. அடக்கம், வெட்கம், நாணம் என்றால் கிலோ எத்தினி என்று கேட்பார் போல சித்தினி. அந்த அளவுக்கு கூச்ச நாச்சம் இல்லாமல் கிளாமர் கடலில் நீந்திக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் பூமிகாவை வைத்து பூப்போல ஒரு கிளாமர் பாட்டை ஷூட் செய்தனர். ஆப்பிள் பெண்ணே நீதானே என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாட்டு (அடடா, அந்த பூமிகாவுக்கும், இந்த பூமிகாவுக்கும் இன்னா ஒரு ஒற்றுமை).

இந்தப் பாட்டுக்காக நீங்கள் போட்டுக் கொள்ள வேண்டிய டிரஸ் இது என்று சில பிட்டுத் துணிகளை கோர்த்து எடுத்து வந்து பூமிகாவிடம் நீட்டியுள்ளனர். அதைப் பார்த்து பதறிப் போய் விட்டாராம் பூமிகா.

இந்த டிரஸ்ஸா என்று அவர் கேட்க, அரண்டு போன காஸ்ட்யூம் டிசைனர், ஆமாங்க, கொஞ்சம் கிளாமராத்தான் இருக்கும், பாட்டுக்கு இப்படித்தான் வேணும்னு டைரக்டர் சொன்னார் என்று தலையைச் சொறிந்துள்ளார்.

அதற்கு பூமிகா, அய்யோ அதைச் சொல்லலை சார், இவ்ளோ பெரீசா இருக்கே, இன்னும் கொஞ்சம் சிறிசா இருந்தா கிளாமர் நல்லா வருமேன்னு சொல்ல வந்தேன் என்று சொல்லி காஸ்ட்யூம் டிசைனரை எகிறடித்தாராம்.

அப்புறம் என்ன, அல்வாவே நாக்கைத் தேடி வந்த பிறகு சாப்பிடாமல் இருக்க முடியுமா. அதை விட குறைச்சலான காஸ்ட்யூமுடன் பூமிகாவை குலுங்க வைத்து, குதூகலமாக பாட்டை முடித்து விட்டார்களாம்.

பூமிகாவின் சமயோஜிதம், காட்சி புரிந்து நடித்தல், திறம்பட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றைச் சொல்லி சொல்லி தொடக்கம் யூனிட் ஆட்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

பூமிகா, ப்ரில்லியன்ட் பேபிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil