For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூட்டிங் ஸ்பாட்

  By Staff
  |

  அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் என்று ஒரு ரவுண்டு கலக்கிய இயக்குநர் சரண் இப்போது ஏறுமுகம் என்ற படத்தை இயக்குவதில் பிஸியாகஇருக்கிறார்.

  இந்தப் படத்தில் அஜித், ரிச்சா நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நீண்ட நாட்களாகக் காணாமல் போயிருந்த பூர்ணசந்திர ராவ் தயாரிக்கிறார்.

  ஒரு மனிதன் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு மிகப்பெரிய ஆளாக மாறுவதுதான் இப்படத்தின் மையக்கரு. (அட ரஜினி படம்!) இந்தப் படத்துக்கு பரத்வாஜ்இசையமைக்கிறார்.

  காதல் மன்னன், அமர்க்களத்தை அடுத்து அஜித்தும் சரணும் இணையும் மூன்றாவது படம் இது.

  ஆனந்தத்தில் மம்முட்டி

  தமிழில் நீண்ட நாளைக்குப் பின்னர் ஆனந்தம் படத்தில் நடிக்கவிருக்கிறார் மம்முட்டி. இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. லிங்கசாமி இப்படத்தைஇயக்குகிறார்.

  சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் எப்போதும் புதிய, புதிய திறமையான இயக்குநர்களை அடையாளம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவது வழக்கம். அதே பாணியில்இப்போது விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருக்கும் லிங்கசாமியை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார் சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரி.

  இந்தப் படத்தில் முரளி, தேவயானி, பூனம் உள்பட பலர் நடிக்கின்றனர். ஆர்த்தூர் வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் தமிழநாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களில் முழு ஜரூராக நடந்து வருகிறது.

  லிங்கசாமி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால் தனது சொந்த அனுபவங்களைக் கொண்டே இந்தப் படத்தை வில்லேஜ் ஸ்டைலில் எடுக்கவிருக்கிறார்.

  ஆனந்தம் படத்துக்கு திருப்பதிசாமி கதை வசனம் எழுதுகிறார்.

  எஸ்.வி.சேகரின் கிருஷ்ணா, கிருஷ்ணா

  நாடக மேடையிலும், டிவியிலும் நாடகங்களை அரங்கேற்றிய எஸ்.வி.சேகர் இப்போது கிருஷ்ணா கிருஷ்ணா என்ற காமெடி படமொன்றை இயக்கவுள்ளார்.

  இதுவரை இவர் 4,000 நாடகங்களை அரங்கேற்றியிருக்கும் எஸ்.வி.சேகர், இப்போது காமெடியில் தூள் கிளப்பி வரும் ரமேஷ் கண்ணாவுடன் சேர்ந்து கிருஷ்ணாகிருஷ்ணா படத்தை இயக்குகிறார்.

  இந்தப் படம் 200 தடவை மேடை ஏறிய இவரது அதிர்ஷ்டக்காரன் நாடகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

  சேகர் கூறுகையில், இந்தப் படத்தில் நல்ல மெஸேஜ் ஒன்று சொல்லப் போகிறோம். எந்தக் கணவனும் மனைவியும் விவாகரத்து செய்யக் கூடாது.ஏன்னா விவாகரத்து செய்தால் யாருமே நல்லவங்க இல்லன்னு அர்த்தமாயிடுது. திருமண பந்தத்துக்கும் அர்த்தம் இல்லாம போயிடுது என்கிறார்.

  இந்தப் படத்தில் சுகன்யா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஆர்.சுந்தர்ராஜன், கோவை சரளா, மதன் பாப், விசித்ரா, மனோரமா, கே.ஆர்.வத்சலா ஆகியோர்நடிக்கின்றனர். மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கிறார்.

  இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க முன்னணி தமிழ் நடிகையை சேகர் அணுகியிருக்கிறார். என்னது எஸ்.வி.சேகருக்கு ஜோடியா ஆளை விடுங்க என்று அவர்ஓடிவிட, கடைசியில் வீட்டில் சும்மா இருக்கும் சுகன்யாவை புக் செய்திருக்கிறார்கள். கிருஷ்ணா!

  சொல்லாமலே சசியின் ரோஜாகூட்டம்

  காதலுக்காக லிவிங்ஸ்டனை நாக்கை வெட்ட வைத்தவர் சொல்லாமலே படப் புகழ் இயக்குநர் சசி. கொஞ்ச காலம் தெலுங்கு பக்கம் போனார்.

  வெங்கடேஷ், கோவிந்தாவை வைத்து தெலுங்கிலும், இந்தியிலுமாக லேடி லவ் படத்தை இயக்கினார்.

  இப்போது, அங்கிருந்து டாப் கியரில் மீண்டும் தமிழுக்கு வந்து விட்டார். இப்போது ரோஜாகூட்டம் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் புதுமுகம்ஸ்ரீகாந்த் அறிமுகமாகிறார். பூமிகா தான கதாநாயகி.

  லிவிங்ஸ்டனை நாக்கை வெட்ட வைத்த மாதிரி ஸ்ரீகாந்தை காதை வெட்ட வைப்பாரா இயக்குனர் என்று தெரியவில்லை.

  ஆஸ்கார் மூவீஸ் ரவிச்சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தற்போது ரவிச்சந்திரன் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான தம்முடு படத்தின் தமிழாக்கமான பத்ரிபடத்தில் பிஸியாக இருக்கிறார். பத்ரியிலும் விஜய்க்கு ஜோடி பூமிகா தான்.

  ஆஸ்கார் மூவீஸ் ரவிச்சந்திரன் இன்னொரு பக்கம் அஜித் நடிக்கும் பூவெல்லாம் உன் வாசம் படத்தையும் தயாரித்து வருகிறார்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X