»   »  ஹெலிகாப்டரில் இருந்து குதித்த ஸ்ரீகாந்த்

ஹெலிகாப்டரில் இருந்து குதித்த ஸ்ரீகாந்த்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் நடந்த போஸ் படப்பிடிப்பின்போது உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்துதவறுதலாகக் குதித்த ஸ்ரீகாந்த் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஸ்னேகாவுடன் ஸ்ரீகாந்த் நடிக்கும் போஸ் படத்தின் சூட்டிங் பெங்களூர் விமானப் படைத் தளத்தில்நடந்து வருகிறது. இதில் ராணுவ கேப்டனாக நடிக்கிறார் ஸ்ரீகாந்த். கிர்கிஸ்தான் உள்ளிட்ட பலஇடங்களில் சூட்டிங்கை முடித்துவிட்டு, இப்போது சில சண்டைக் காட்சிகள் பெங்களூரில்படமாக்கப்பட்டு வருகின்றன.

ராணுவத்தின் அனுமதியுடன் ராணுவ ஹெலிகாப்டரும் படத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் ஒரு காட்சிப்படி, பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் இருந்து ஸ்ரீகாந்த் குதிக்கவேண்டும்.

இதற்காக டூப் நடிகரை டைரக்டர் பயன்படுத்த திட்டமிட்டார். ஆனால், தானே இந்தக் காட்சியில்நடிப்பதாக ஸ்ரீகாந்த் கூறிவிட்டார். இதையடுத்து ராணுவ மேஜர் ரவி என்பவரிடம் பயிற்சியும்பெற்றார் ஸ்ரீகாந்த்.

படத்தில் அந்தக் காட்சியின்போது, ஹெலிகாப்டர் குறைவான உயரத்தில் பறக்கும். அப்போதுஸ்ரீகாந்த் கீழே குதிக்க வேண்டும். ஆனால், குறைவான உயரத்தில் பறக்க வேண்டிய ஹெலிகாப்டரைவிமானி அதிக உயரத்தில் இயக்கினார்.

பின்னர் ஸ்ரீகாந்த் குதிப்பதற்கு வசதியாக அதன் உயரத்தை குறைக்க ஆரம்பித்தார். ஆனால்,குதிப்பதற்கான உயரத்தில் தான் ஹெலிகாப்டர் பறப்பதாக நினைத்த ஸ்ரீகாந்த் அதிலிருந்துகுதித்துவிட்டார்.

மிக அதிக உயரத்தில் இருந்து ஸ்ரீகாந்த் கீழே குதிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தபடக் குழுவினர் அலறியடிதுக் கொண்டு அவரை நோக்கி ஓடினர்.

ஒரு வழியாக லாவகமாக தரையில் விழுந்து ஸ்ரீகாந்த் தப்பிவிட்டார். அந்த உயரத்தில் இருந்துசுதாரிக்காமல் விழுந்திருந்தால் கை, கால் முறிவு ஏற்பட்டிருக்குமாம்.

படத்துகாக ராணுவ முகாமில் தங்கியிருந்து பல பயிற்சிகள் எடுத்து, உடலை வலுவாக்கிவைத்திருந்ததால் ஸ்ரீகாந்த் தப்பினாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil