Just In
Don't Miss!
- Automobiles
வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்
- News
அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Technology
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- Finance
முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..!
- Sports
ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் கணியன்பூங்குன்றன் மற்றும் மனோ
லண்டன் : 2017ல் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம்தான் துப்பறிவாளன் ,இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது மிஸ்கின் இயக்கி வருகிறார் .இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
விஷால் கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடித்தார் ,அந்த படம் கலவையான விமர்சனங்களே பெற்றது .இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார் .முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் மனோ என்கிற நண்பர் கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பின் போது விஷாலும் பிரசன்னாவும் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் பிரசன்னா.அந்த பதிவில் மீண்டும் ஆக்ஷனில் கணியன்பூங்குன்றன் மற்றும் மனோ என்று குறிப்பிட்டுள்ளார் .

ஆரம்ப காலத்தில் ஃபை ஸ்டார் படம் மூலம் அறிமுகமாகிய பிரசன்னா ,தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்தார் ,அப்போது மிஸ்கின் எடுத்த அஞ்சாதே படத்தில் மாறுபட்ட வில்லனாக நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.மிஸ்கினின் அஞ்சாதேதான் பிரசன்னாவுக்கு இரண்டாம் வாய்ப்பு சினிமாவில் வழங்கியது .இதற்கு பிறகு மிஸ்கினுடன் மீண்டும் பிரசன்னா பணியாற்றிய படம் தான் துப்பறிவாளன் .

இந்த படத்தில் கணியன்பூங்குன்றனின் நண்பன் மனோ கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் பிரசன்னா ,படம் முழுக்க வரும் இந்த கதாபாத்திரம் தான் கேள்விகளை கேட்டு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு கதையை புரிய வைக்கும் ,அந்த அளவுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் இந்த கதாபாத்திரம் .
விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 'தளபதி 64' சேட்டிலைட் ரைட்ஸ் வாங்குனது யார் தெரியுமா?
ஆங்கில நாவலான ஷெர்லாக் ஹோமஸ் நாவலில் இருந்து கதையை தழுவி தமிழில் மிஸ்கின் படம் இயக்கி இருக்கிறார். ஆங்கிலத்தில் சீரியல்கள் ,படங்கள் என ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலை தழுவி பலவகை எடுக்கபட்டு விட்டது, இருந்தாலும் மிஷ்கின் எடுத்தால் அது தனி சிறப்பே.