»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேம்பஸ்.. இது மீண்டும் ஒரு கல்லூரிக் காதல் கதை தான். வழக்கமாக கல்லூரி என்றாலே முக்கோணக் காதல்தானே வரும். ஆனால், இதில் 2 ஹீரோயின்கள், 2 ஹீரோக்கள். இதனால் இது ஒன்-டு-ஒன் லவ் தானாம். அதேநேரத்தில் கல்லூரி கலாட்டாக்களும் காதல் சேட்டைகளும் நிறைந்த படமாம்.

படத்தில் எல்லோருமே புதுசு. ஹீரோயின்களாக திவ்யா திவிவேதி என்று ஒரு மும்பை மாடலையும் பெதல் என்றஷீத்தல் என்றொரு மலையாளக் குதிரையையும் பிடித்து வந்துள்ளார்கள். பெதல் மலையாளியாக இருந்தாலும்மும்பையில் மாடலிங் செய்து வருபவர் தான்.

கேமரா முன் டிரஸ்ஸைக் கழட்டிப் போட்டு கவர்ச்சி காட்டுவதற்கு திவ்யாவும் பெதலும் அலையோ அலை என்றுஅலைகிறார்கள். கூச்சத்துக்கே கூச்சம் வந்து விடும் அளவுக்கு படு கிளாமர் காட்டுகிறார்கள்.

ஹீரோக்கள் ராஜேஷ், நிதேஷ். இந்த இருவரும் கூட மும்பை ஆசாமிகள் தான். மீசையில்லாமல் குணால் மாதிரிசாக்லேட் பாய்ஸ் கன்னங்களுடன் நிற்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான காலேஜ் காட்சிகளை சென்னையின் புகழ் மிக்க சர்ச் பார்க் கான்வென்டில்படமாக்கியிருக்கிறார்களாம். இங்கு சூட்டிங் நடத்த அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாம். (முதல்வர்ஜெயலலிதா படிச்ச ஸ்கூலாச்சே). கஷ்டப்பட்டு வாங்கியிருக்கிறார்கள்.

படத்தின் டைரக்டரும் புதுசு தான். பெயர் சார்லி.

படத்தின் கதை தான் கொஞ்சம் அபாயகரமானதாகத் தெரிகிறது. ஒண்ணும் இல்லை, ராணி மேரிக் கல்லூரிஇடிப்பை பேக்கிரவுண்டாக வைத்து தான் கதையைப் பின்னி இருக்கிறாராம் சார்லி. (சார்லியை பின்னி எடுக்கவீட்டுக்கு ஆட்டோ வராமல் இருந்தால் சரி!!).

காதலோடு சேர்த்து, கல்லூரிச் சண்டை, பின்னர் கல்லூரியைக் காக்கச் சண்டை என்று போகிறதாம் கதை.

பெதல் பார்க்க கொஞ்சம் பூசினாற் போல, தமிழ் சினிமாவுக்கு ஏற்றார் போலவே இருக்கிறார். மும்பையில் பார்ட்டிசர்க்கிளில் இவர் மிகவும் பேமஸாம். கேரளாவில் பிறந்தாலும் வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான்.

திவ்யா சிக் சைஸ். இந்தியிலும் ஒரு படத்தை முடித்துவிட்டார். இன்னொரு இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். போலார் பேன் உள்ளிட்ட பல டிவி விளம்பரங்களில் நடித்திருக்கிறார். ஸ்டேஜ் டிராமாக்களும்செய்தவராம்.

படப்பிடிப்புத் தளத்தில் இருவருமே ஒற்றுமையாகவே இருப்பதை பார்க்க முடிந்தது. பேச்சு கொடுத்தால், தமிழில்முதலிடத்துக்கு வர வேண்டும். அதற்காக எவ்வளவு கவர்ச்சி வேண்டுமோ அவ்வளவையும் காட்டத் தயார்என்றனர் கோரஸாக.

டபுள் அட்டாக்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil