»   »  கேரவன் இல்லையா-பாயும் நடிகைகள்

கேரவன் இல்லையா-பாயும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோ, ஹீரோயின்கள் இனி கேரவன் வேனுக்கான செலவை தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்ததில் இருந்து பிரச்சனை உருவாகியுள்ளது.

ஏசி பெட், பாத்ரூம் என சகலவசதிகளுடன் கொண்ட இந்த கேரவன் வாகனம் முன்பெல்லாம் எங்காவது அவுட்டோர் ஷூட்டிங் போனால் மட்டுமே ஹீரோ, ஹீரோயின்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இப்போதெல்லாம் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும், அது சென்னையாக இருந்தாலும், கேரவன் வேன் இருக்கனும் என்று கண்டிசன் போட ஆரம்பித்துவிட்டனர் நடிகைககளும் நடிகைகளும்.

இதற்கு ஒரு நாளுக்கு வாடகை ரூ.3,000த்தில் ஆரம்பித்து ரூ.15,000 வரை. மாதக்கணக்கில் இந்த வேனை வாடகைக்கு எடுத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

கேரவன் செலவை நடிகர், நடிகை தலையிலேயே சாத்துவது என்ற முடிவுக்கு சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வந்தனர். ஆனால், இதற்கு முன்னணி நடிகைககளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம்.

குறிப்பாக திரிஷா, அசின், நயன்தாரா, பாவனா, மீரா, நமீதா ஆகியோர் ஸ்டுடியோவில் கேரவன் இல்லை என்றால் பரவாயில்லை, ஆனால் அவுட்டோர் ஷூட்டிங்கில் கட்டாயம் தர வேண்டும் என்று கூறி விட்டனராம்.

இதனால் இவர்களை படம் எடுத்து வரும், படம் எடுக்க திட்டமிட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil