»   »  திரிஷா..கெளதம்..குண்டுவெடிப்பு!

திரிஷா..கெளதம்..குண்டுவெடிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.

கெளதம் மேனன் இயக்க, திரிஷா நடிக்க உருவாகி வரும் படம் சென்னையில் ஒரு மழைக்காலம். ஹைதராபாத்தில் பிளாஸ்ட் காலம் நிலவி வரும் சூழ்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளார் மேனன்.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில் இப்படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் நடந்து கொண்டிருந்ததாம்.

திரிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் முன்னணி ஹீரோ யாரும் இல்லை. நான்கு புதுமுகங்கள்தான் நாயகர்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் மேனன் அண்ட் கோவினர் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தினர்.

ரவிதேஜாவுடன் நடித்து வரும் தெலுங்குப் பட ஷூட்டிங்கிலும் பங்கேற்க ஏதுவாக இருக்கும் என்பதால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளுமாறு திரிஷா கேட்டுக் கொண்டதன் பேரிலேயே அங்கு படப்பிடிப்பு நடந்ததாம்.

ஆனால் படப்பிடிப்புக்குப் போன இடத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால் படப்பிடிப்பை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டதாம். படப்பிடிப்பு நடந்த இடத்திலேயே இரண்டு முறை வெடிகுண்டு பீதியால் பாதியில் நிறுத்த வேண்டியதாகி விட்டதாம்.

இருந்தாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த கெளதம் மேனன் தீர்மானித்தாராம். திட்டமிட்டபடி காட்சிகளை படமாக்கிய கெளதம் மேனன் ஹைதராபாத் பந்த் அன்றும் கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

படம் சிறப்பாக வந்திருப்பதாவும், திரிஷாவுக்கு இப்படம் புது பரிமாணத்தைக் கொடுக்கும் என்றும் கெளதம் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil