»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இமாமி விளம்பரத்தில் ஜோடியாக ஆடிப்பாடிக் கொண்டிருக்கும் ஜோதிகாவும் சிம்ரனும் 12B படத்தில் இணைந்துநடிக்கிறார்கள். ஆனால் படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் இருவரும் சந்திக்கிறார்கள். அதுவும் ஒரு "ஹாய்"சொல்வதோடு சரியாம்! எப்படியோ, ஆளுக்கு ரெண்டு மூணு பாட்டுக்கு வந்து டான்ஸ் ஆடினா, சரிதான்.!

இப்படத்தின் மூலம் இயக்குநராகும் ஒளிப்பதிவாளர் ஜீவா, கதாநாயகனைத் தேடித் தேடி அலைந்து, மும்பை மாடல்ஷியாம் என்பவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இவர் மதுரையில் படித்தவராம். மாடல் செய்வதற்காக மும்பைசென்றுவிட்டாராம்.

இந்த ஒரு படத்தோடு முடித்துக்கொண்டு, மீண்டும் கேமராவைத்தான் தூக்கப்போவதாகக் கூறும் ஜீவா, 12ஆபேருந்து மைலாப்பூர் போகுமா என்று இப்போது யாரும் கேட்கவில்லை. 12B எப்போது வரும் என்றுதான்கேட்டுட்டிருக்காங்க என்றார்.

வழக்கமான சினிமா ஃபார்முலாவெல்லாம் இதில் இருக்காது; ஆனாலும் அனல் பறக்கும் என்கிறார்.

விக்ரம் சிங் தயாரிக்கும் 12B படத்துக்கு இசை "மின்னலே" புகழ் ஹாரீஸ் ஜெயராஜ்.

பார்த்தினின் ஏலேலோவுக்கு... கமல் ஐலஸா...

"புதியபாதை" முதல் "ஹவுஸ்ஃபுல்" வரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர்-இயக்குநர் பார்த்திபனின் அடுத்த படம் "ஏலேலோ".

பார்த்துப் பார்த்துப் படங்களைத் தேர்ந்தெடுக்கும் ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபனின் "ஏலேலோ"வையும் தேர்வு செய்திருப்பது விசேஷம்.

"ஏலேலோ" துவக்க விழாவிற்கு உள்பட தேசிய, மாநில விருது பெற்ற கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டார்கள்.

ஆளவந்தானின் இந்திப் பதிப்பான "அபை" ஷூட்டிங்கிற்காக பிஸியாக அலைந்து கொண்டிருந்த கமலும் "ஏலேலோ" துவக்க விழாவிற்கு வந்திருந்தார்.

""பார்த்திபன் "ஏலேலோ" என்று சொன்னால், "ஐலஸா" சொல்லி இந்தப் படத்தை வெற்றி பெற வைக்க வேண்டியது நம் கடமை என்றார் கமல்.

இதுவரை இளையராஜா புராணம் பாடிக் கொண்டிருந்த பார்த்திபன், உலகப் புகழ் பெற்ற ரஹ்மானின் மாடர்ன் இசை என் படத்திற்குக் கிடைத்திருக்கிறதுஎன்று ரெஹ்மான் புகழ் பாடினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil