»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் ரேஞ்சிற்கு சிந்திக்கும் உலக நாயகன் கமல் ஹாசனின் சொந்தக் கதை படமாகிறது என்ற செய்திவெளியானதிலிருந்து கமலஹாசனின் ஆளவந்தான் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படத்தில்சில காட்சிகளால் ஏற்பட்ட தொய்வு படத்திற்கு இமாலய வெற்றியைக் கொடுக்க தவறி விட்டது. இருப்பினும்விறுவிறுப்பு, தொழில்நுட்பம், கதை, கமலின் நடிப்பு என பல பிளஸ்

பாயிண்டுகளால் ஆளவந்தான், தமிழ்ப் படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

சூர்யாவுக்கு ஸ்டார் வேல்யூவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் நந்தா. அதை ஓரளவுநிறைவேற்றியும் உள்ளது. நந்தா மூலம்நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் சூர்யா. சேதுவுக்கு பிறகு பாலாஇயக்கிய இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. வில்லனாக பரிமளிக்கக் கூடிய வாய்ப்பு ராஜ் கிரணுக்கு இனிமேல்கிடைக்கலாம்.

ஷாஜகான், வித்தியாசமான காதல் கதை. ஆயினும், ஜோடியாக நடித்தவர் வேறு ஒருவருக்கு ஜோடியாக மாறியதால்விஜய்யின் ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரிய அளவில் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது ஷாஜகான். மணி ஷர்மாவின் காதுகளுக்கு மட்டுமல்லாது இதயங்களுக்கும் குளுமையானபாடல்கள் படத்தின் பலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று.

கே.பாலச்சந்தரின் 100-வது படம், கெஸ்ட் ரோலில் கமல்ஹாசன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலச்சந்தர்இயக்கும் படம் என்ற பல முக்கியத்துவங்கள் இருந்தும் கூட பார்த்தாலே பரவசம், ரசிகர்களைப்பரவசப்படுத்தவில்லை. இருப்பினும் பாலச்சந்தரின் படம் என்ற அழுத்தமான முத்திரை படத்திற்கு உண்டு.ஆயினும் படம் பெரிய அளவில் ஓடவில்லை என்பது பாலச்சந்தருக்கு மட்டுமல்லாது, நல்ல படங்களை வரவேற்கும்தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் வருத்தமே.

மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற ஒரே காரணத்திற்காக அந்தப் படங்களை தமிழிலும் எடுத்தால் அதேஅளவுக்கு அவை வெற்றி பெறுமா? இந்தக் கேள்வி காசி படத்திற்குப் பிறகு பெகிதாகியுள்ளது. மலையாளரீமேக்கான காசி, தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. விக்ரம் மட்டுமே இந்தப் படத்தில் மிளிர்கிறார்.உருக்கமான பாடல்களுக்குப் பெயர் போன இசை ஞானி கூட இந்தப் படத்தில் அமர்க்களப்படுத்த தவறி விட்டார்.இருப்பினும், கண் விழிகளை கஷ்டப்படுத்திக் கொண்டு, பார்வையற்ற இளைஞனாக படத்தில் வாழ்ந்திருக்கும்விக்ரமுக்கு சபாஷ் போடாமல் இருக்க டியாது. விக்ரக்கு இந்தப் படம் ஒரு மைல் கல்.

பாலச்சந்தரைப் போலவே பெரிய இடைவெளிக்குப் பிறகு வெள்ளித் திரைப் பக்கம் படமெடுக்க வந்திருக்கிறார்பாரதிராஜா. அவரது கடல் பூக்கள், வெளியாவதற்கு முன்பே தேசிய விருதைப் பெற்று சாதனை படைத்து விட்டது.அவருக்கே உரிய அழகான காதல் கதையை கடல் பூக்களில் கொடுத்திருக்கிறார் பாரதிராஜா. முரளிக்கு இந்தப்படம் நிச்சயம் பெரிய பிரேக்கைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படங்கள் மட்டுமல்லாது மேலும் பல படங்களும் ஏதாவது ஒரு காரணத்திற்காக ரசிகர்களால்பேசப்பட்டுள்ளன. பொதுவில், 2001ல் வெளியான பெரும்பாலான தமிழ்ப் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்வெற்றிகரமான படங்களே.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

பிரண்ட்ஸ்
தீனா
பிரியாத வரம் வேண்டும்
மின்னலே
தெனாலி
பார்வை ஒன்றே போதுமே
டும் டும் டும்
லிட்டில் ஜான்
ஆனந்தம்
சிட்டிசன்
தில்
நரசிம்மா
சமுத்திரம்
பூவெல்லாம் உன் வாசம்
சாக்லேட்
12-பி
பாண்டவர் பூமி
மாயன்
ஆண்டான் அடிமை
ஆளவந்தான்
காற்றுக்கென்ன வேலி
தவசி
நந்தா
ஷாஜகான்
பார்த்தாலே பரவசம்
காசி
கடல் பூக்கள்

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil