»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

விஜய், சூர்யா நடிப்பில் 2001-ம் ஆண்டு பொங்கல் ரிலீசான பிரண்ட்ஸ் இமாலய வெற்றியைப் பெற்றது.மலையாளத்தில் இதே பெயரில் வெளியான படமே தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் இயக்கியசித்திக்தான் தமிழிலும் இயக்கினார்.

மற்றொரு மலையாள ரீமேக்கான பிரியாத வரம் வேண்டும், மலையாளத்தில் ஓடிய அளவுக்கு தமிழில் ஓடவில்லைஎன்றாலும் கூட ஷாலினி மற்றும் பிரசாந்த்தின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

ஹாரீஸ் ஜெயராஜின் அசத்தலான மியூசிக்கில் மின்னலே சமீப காலம் வரை பேசப்பட்ட ஒரு படம். அத்தனைபாடல்களும் தமிழகத்தின் அத்தனை பேராலும் குறைந்தது ஒரு தடவையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும்.

பாடல்களுக்காக பேசப்பட்ட இன்னொரு படம் பார்வை ஒன்றே போதுமே. சிம்ரனின் தங்கை மோணல் இந்தப்படத்தில்தான் அறிமுகமானார். அதற்குப் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு படம் இல்லை.

மணிரத்னத்தின் சிஷ்யரான அழகம் பெருமாள் இயக்கிய டும் டும் டும் சுமாராக ஓடினாலும் கூட அனைவராலும்பேசப்பட்டது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுக்கு இந்தப் படம் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றுத் தந்தது.

அந்தக் கால பழனியை ஆனந்தம் என்ற பெயரில் மாறு வேடத்தில் எடுத்திருந்தாலும் கூட மம்முட்டிக்கு பெயரைப்பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் வெற்றி, சமுத்திரம் என்ற படம் எடுக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

புலியைப் பார்த்து சூடு போட்டக் கொண்ட பூனையைப் போல, கமலைப் போல அவதாரம் எடுக்க நினைத்துஅசட்டுத்தனம் வழிய வெளியானது சிட்டிசன். ஆனாலும் கதையும், இசையும், டைரக்ஷனும் பேசப்பட்டது. தமிழில்வித்தியாசமான கதையுடன் வந்த படம் என்ற பெயரைப் பெற்றது.

சேதுவுக்குப் பிறகு பெரிய அளவில் படங்கள் வராத நிலையில் விக்ரம் நடித்து வெளியான தில் சக்கை போடுபோட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்த வித்யாசாகரின் திறமையை தில் பாடல்கள் நிரூபித்தன.

தீனாவின் சோர்வால் தளர்வடைந்திருந்த அஜீத்திற்கு பூவெல்லாம் உன் வாசம், நிம்மதியான சுவாசத்தைக்கொடுத்தது. மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இரட்டை வீடு செட் பெரிதாக பேசப்பட்டது. படம் நன்றாகஓடியது.

மல மல மலே மலே .. இளசுகளுக்கு தீணி போட்ட இந்தப் பாடல் மட்டும் இல்லாவிட்டால் சாக்லேட் பெரும்வெற்றியைப் பெற்றிருக்காது என்று பேசப்படும் அளவுக்கு மும்தாஜின் கவர்ச்சி பிளஸ் தேவாவின் அசத்தல்இசையில் பிரபலமானது சாக்லேட். பிரசாந்த் இதில் நடித்திருந்தார். மற்றபடி அவருக்கு இந்தப் படத்தில் பெரியபங்கு ஏதும் இல்லை.

புதுமையான முயற்சி என்ற போர்வையில் இரட்டை கதைகளுடன் வெளியான 12-பி எதிர்பார்த்த அளவுக்குப்போகவில்லை. ஆங்கிலப் படத்தின் கதையுடன், தமிழில் வெளியான படம். இருப்பினும் தமிழில் இதுவரைஇல்லாத புதுமை என்ற விகிதத்தில் இதுவும் சாதனைப் படங்களின் பட்டியலில் சேருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தார் டைரக்டர் சேரன். அவரது பாண்டவர்பூமி, பட்டணத்து மோகத்தில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். நிறையவே யோசிக்க வைத்துவிட்டார் இந்தப் படத்தின் மூலம் சேரன்.

நறுக்கென தலையில் குட்டுவது போல ஒரு கதையுடன், சத்யராஜுடன் கைகோர்த்து தனது டைரக்ஷன் திறமையைமீண்டும் நிரூபித்தார் ஆண்டான் அடிமையில் மணி வண்ணன். மிகத் துணிச்சலான திரைக்கதை. நிறையவேபேசப்பட்டது. ஆனால் படம்தான் சரியாக போகவில்லை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil