அஜித்தை சந்தித்த டி.இமான்.. விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் பற்றி மகிழ்ச்சி ட்வீட்!
Recommended Video

ஐதராபாத் : சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மே 7-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பில் கிராமத்து செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.
டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இமான் நூறு படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் இதுதான் அஜித்துடன் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பாடல் படமாக்கப்படுவதைப் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் இமானை அழைத்துள்ளார் அஜித். அவரது அழைப்பை ஏற்று ஐதராபாத் சென்று ஷூட்டிங்கை பார்த்திருக்கிறார் இமான்.

"நான் இசையமைக்கும் பாடல்கள் உருவாவதைப் பார்க்கும் வாய்ப்பு எப்போதாவது தான் கிடைக்கும். நான் இசையமைத்த பாடல்களுக்கு எளிமையின் மறு உருவமான அஜித் ஆடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஷூட்டிங்கை பார்க்க அழைத்த அஜித் சாருக்கு நன்றி. டைரக்டர் சிவா மற்றும் படத்தைத் தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸுக்கு நன்றி" என ட்விட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இமான்.
படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோரும் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்களில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்தாலும், படத்தில் பிளாக் ஹேர்ஸ்டைலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான பாடல் காட்சிப் பதிவு புகைப்படம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











