Don't Miss!
- News
மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!
- Automobiles
இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடேங்கப்பா.. யாரை பார்க்கிறதுன்னே தெரியலையே.. சுந்தர் சி படத்தில் ஆட்டம் போட்ட யுவன்.. டிடி ட்வீட்!
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா நடனமும் ஆடியுள்ளார் என்கிற செம சூப்பரான தகவலை டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ போட்டு அறிவித்துள்ளார்.
பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த காமெடி படம் நிச்சயம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாயகனாக
களமிறங்கும்
சுந்தர்
சி...
நாளைக்கு
டைட்டில்
ரிலீசாக
இருக்காம்!

மீண்டும் கலகலப்பா?
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு பாணியில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஊட்டியில் ஷூட்டிங்
குளுகுளுன்னு ஊட்டியிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. ஆவ்னி சினிமாஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகை குஷ்புவும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. நடிகர் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்துக்கு இந்த படம் நிச்சயம் நல்ல கம்பேக்கை கொடுக்கும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

டான்ஸ் வித் யுவன்
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், படக்குழுவுடன் இணைந்து ஒரு கல்யாண கலாட்டா பாடலில் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து நடனமாடி உள்ளார் என்கிற ஹாட் அப்டேட்டை டிடி நீலகண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ போட்டு அறிவித்துள்ளார்.

யாரை பார்க்கிறதுன்னே தெரியல
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, ஐஸ்வர்யா தத்தா, எட்டிப் பார்க்கும் அம்ரிதா அய்யர், சிகப்பு கண்ணாடியுடன் குனிந்து உட்கார்ந்து இருக்கும் டிடி, கோல்ட் கலர் கூலிங் கிளாஸில் மின்னும் பிக் பாஸ் சம்யுக்தா, டிடிக்கு பின்னால் நிற்கும் யுவன் மற்றும் அவருக்கு பின்னால் நிற்கும் இயக்குநர் சுந்தர் சி என இந்த போட்டோவில் யாரை பார்த்து ரசிப்பது என்றே தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.