»   »  தனுஷ் நெற்றியில் பாய்ந்த கத்தி!

தனுஷ் நெற்றியில் பாய்ந்த கத்தி!

Subscribe to Oneindia Tamil

படப்பிடிப்பின்போது நடிகர் தனுஷ் நெற்றியில் கத்தி பாய்ந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

நடிகர் தனுஷ் தற்போது பொல்லாதவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். குத்து ரம்யா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். வெற்றி மாறன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அண்ணா சாலையில் உள்ள பிரபல கெயிட்டி தியேட்டரில் படப்பிடிப்பு நடந்தது. அந்த்த தியேட்டரை படத்திற்காக மீன் பதப்படும் தொழிற்சாலை போல மாற்றி படமாக்கினர்.

இதற்காக 30 டன் மீன்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. கடந்த ஒருவாரமாக இங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இந்த நிலையில் நேற்று நடந்த படப்பிடிப்பின்போது தனுஷும், வில்லன் டேணியல் பாலாஜியும் மோதுவது போன்ற காட்சியை சுட்டனர்.

அப்போது டேணியல் பாலாஜி, தனுஷை கத்தியால் வெட்டுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக டேணியல் பாலாஜி கையில் இருந்த கத்தி, தனுஷின் நெற்றியில் பாய்ந்தது.

இதையடுத்து தனுஷ் நெற்றியிலிருந்து குபுக் என ரத்தம் கொப்பளித்தது.உடனடியாக தனுஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. பயப்படும் அளவுக்கு பெரிதாக இல்லை என்று கூறிய டாக்டர்கள் தனுஷுக்கு சிகிச்சை அளித்தனர்.

தனுஷ் காயம்பட்ட விவரம் அறிந்ததும் அவரது மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு விரைந்து சென்று நலம் விசாரித்தார்.

சண்டைக் காட்சிகளில் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தனுஷை அவரது மனைவி ஐஸ்வர்யா, தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் குடும்பத்தினர் அருகே இருந்து கவனித்து வருகின்றனர்.

ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தனுஷை அறிவுறுத்தியுள்ளனர். எனவே ஒரு வாரத்திற்குப் பிறகே பொல்லாதவன் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil