»   »  துள்ளுற வயசில் தீபிகா

துள்ளுற வயசில் தீபிகா

Subscribe to Oneindia Tamil
துள்ளுவதோ இளமையைத் தொடர்ந்து அதே போன்ற விடலைப் பருவ காதல் லீலைகளை பறைசாற்றும் படங்கள் மொது, மொதுவென படையெடுத்தன. சில ஓடின. பல அடி வாங்கின.

இப்போது அது மாதிரி படங்கள் குறைந்திருக்கிற நல்ல நேரத்தில் மீண்டும் இளமைத் துள்ளல் என்ற அடையாளத்துடன் அஜால்.. குஜால் படம் ஒன்று தயாராகி வருகிறது.

படத்தின் பெயர் துள்ளுற வயசு (துள்ளுவதோ இளமையை நினைவூட்டி படம் பார்க்க விடலைகளை இழுக்கவோ?).

இதில் புதுமுகமாக தீபிகா என்பவர் அறிமுகமாகிறார். துள்ளவதோ இளமை ஷெரீனை தூக்கி சாப்பிடனும் என்ற கண்டிசனுடன் சான்ஸ் கிடைத்திருப்பதால், முடிந்தவரை இளமையைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

ஹீரோவாக ராகவா என்பவர் நடிக்கிறார். பள்ளிக் கூடத்தில் ஆரம்பிக்கும் காதல், அப்படியே கல்லூரிக்கு நகரும் கதையாம். சிவரஞ்சனி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பழையவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு படத்தில் அவ்வளவாக வேலை ஏதும் இல்லை.

அதையெல்லாம் பார்த்துக் கொள்ளப் போவது தீபிகாவும் இன்னும் சில இளசுகளும் தான். அவர்களுடன் முட்டி மோதப் போவது ராகாவா உள்ளிட்ட பொடிசுகள். கார்த்திக் ராஜா தான் இசை. அய்த்தலக்கா டான்ஸ் மூவ்மெண்டுகளுக்காகவே சில தடாலடி டியூன்களைப் போட்டுத் தந்திருக்கிறாராம்.

படத்தை தானே தயாரித்து, இயக்குவது கோபால். பெங்களூர், மைசூர் என கன்னட தேசத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவி ரோலில் (உடையில்) தீபிகா கலக்கிக் கொண்டிருந்தாலும் பார்க்க அவர் மாணவி மாதிரி இல்லை. வயது முதிர்ச்சி தெரியத்தான் செய்கிறது.

இருந்தாலும், கவர்ச்சிக்காகத் தான் தன்னை படத்திலேயே வைத்திருக்கிறார்கள் என்பதை ஆழமாய் உணர்ந்திருக்கும் தீபிகாவும், பழைய தீபா லெவலுக்கு கூச்சமேதும் இல்லாமல் கலாய்த்துக் கொண்ருக்கிறார். இவருக்கு சொந்த ஊர் ஆந்திராவாம்.

இந்தப் படமே இன்னும் முடிவடையாத நிலையில் வேறு கம்பெனிகள் பக்கமும் தீபிகா சான்ஸ் கேட்டு நூல் விட்டுக் கொண்டிருப்பது தனிக் கதை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil