»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

"காதலுடன்" படத் தயாரிப்பாளரான நடிகை தேவயானி தனக்குப் பேசிய சம்பளத்தைக் கொடுக்காததைத்தொடர்ந்து நடிகர் சங்கத்திடம் புகார் கூறியுள்ளார் நடிகர் முரளி.

தன் கணவர் ராஜகுமாரனை இயக்குநராக வைத்து "காதலுடன்" படத்தைத் தயாரித்து வருகிறார் தேவயானி.இப்படத்தில் தேவயானிக்கு ஜோடி முரளி.

இப்படத்திற்காக முரளிக்கு ரூ.30 லட்சம் சம்பளம் கொடுக்கப்படும் என்று பேசப்பட்டு, முன் பணமாக ரூ.10 லட்சம்அவரிடம் கொடுக்கப்பட்டது. மீதிப் பணத்தை படப்பிடிப்பு முடிந்த பின் தருவதாக தேவயானி கூறியுள்ளார்.

இதற்குச் சம்மதித்த முரளி "காதலுடன்" படத்தில் நடித்தார். ஆனால் படம் பாதி வளர்ந்த நிலையில் "இன்னொரு ரூ.10லட்சம் கொடுங்கள், மீதிப் பணத்தை "டப்பிங்" பேசும்போது வாங்கிக் கொள்கிறேன்" என்று முரளி கேட்டுள்ளார்.

ஆனால் தேவயானியோ "தயாரிப்பு செலவிற்கே பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். இதில் இப்போது நீங்கள்வந்து கேட்டால் எப்படி?" என்று கூறி பணம் தர மறுத்துள்ளார்.

ஆனால் இந்தப் படத்தின் கோயம்புத்தூர் விநியோக உரிமையை முரளிக்கு அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.அதை ஏற்றுக் கொண்ட முரளியும் தொடர்ந்து படத்தில் நடித்து வந்தார்.

மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர் ஒருவரிடமும் இது தொடர்பாகப் பேசி "காதலுடன்"படத்தை முரளி விலை பேசி முடித்து விட்டார். அதற்கான முன் பணத்தையும் விநியோகஸ்தரிடமிருந்து முரளிபெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், "காதலுடன்" படத்தை ரிலீஸ் செய்வதற்கானஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து கோயம்புத்தூர் பகுதி வெளியீட்டு உரிமையை வேறொருவிநியோகஸ்தருக்கு ராஜகுமாரன் பேசி, உறுதியளித்துள்ளார்.

இது தெரிந்ததும் முரளிக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே ராஜகுமாரனிடம் அவர் போன் செய்துகேட்டபோது, "சம்பளத்திற்காக ஏதாவது ஏரியாவை வேண்டுமனால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றுதான்கூறினேன். ஆனால் ஏரியா குறித்து நான் முடிவாகச் சொல்லாதபோது, உங்கள் இஷ்டத்திற்கு விநியோகம் செய்வதுநியாயமா?" என்று ராஜகுமாரன் பதிலுக்குக் கேட்டுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. தேவயானியும், "உங்களுக்குப் பேசிய சம்பளத்தைத்தந்து விடுகிறோம். ஏரியா விநியோக விவகாரத்தில் நீங்கள் தலையிடாதீர்கள்" என்று முரளியிடம் கூறிவிட்டார்.

முரளியோ, "கோயம்புத்தூர் ஏரியாவை நான் எடுத்துக் கொள்ளலாம் என்ற நீங்கள் கூறியதால்தான் நான்அப்பகுதி விநியோகஸ்தரிடம் அட்வான்ஸும் வாங்கி விட்டேன். இப்போது அந்த விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று சொன்னால் எப்படி?" என்று கேட்டுள்ளார்.

அதற்கு தேவயானி "நடந்தது நடந்துபோச்சு. பிரச்சனையை வளர்க்க வேண்டாம். உங்களுக்குப் பேசியசம்பளத்தைக் கொடுத்து விடுகிறோம்" என்றார்.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த முரளி, சம்பந்தப்பட்ட கோயம்புத்தூர் விநியோகஸ்தரிடம் பேசினார்.அவரோ, "பேசியபடி எனக்கு இந்த ஏரியாவின் உரிமை வேண்டும். இல்லையென்றால் நான் கொடுத்தஅட்வான்ஸ் பணத்தோடு ரூ.3 லட்சம் வட்டிப் பணத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் ஏரியா உரிமை தனக்குத்தான் என்பதை எழுதி வாங்காமல் போய் விட்டோமே என்று வருந்தியமுரளி, மீண்டும் தேவயானியிடம் சென்று தன் சம்பளப் பாக்கியையாவது கொடுக்குமாறு கேட்டுள்ளார். அங்கேமேலும் ஒரு அடி முரளிக்குக் காத்திருந்தது.

"பட வியாபாரத்தில் சில கஷ்டங்கள் உள்ளன. அதனால் உங்களுக்குப் பேசிய சம்பளத்தில் ரூ.5 லட்சத்தைக்குறைத்துக் கொள்ளுங்கள். மீதிப் பணத்தைக் கொடுத்து விடுகிறோம். டப்பிங் மட்டும் வந்து பேசிக் கொடுத்துவிடுங்கள்" என்று முரளியிடம் தேவயானி கூறியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த முரளி, முதலில் பேசியபடி பணம் கொடுக்காத வரை "டப்பிங்"கிற்கே போகக்கூடாது என்று முடிவெடுத்துள்ளார். இதனால் அவர் தொடர்பான "டப்பிங்" வேலைகள் அனைத்தும்தடைபட்டுள்ளன.

குறிப்பிட்ட நாள் வரை சம்பளப் பணத்திற்காகக் காத்திருந்த முரளி, அது வந்து சேராததைத் தொடர்ந்து நடிகர்சங்கத்திடம் இது தொடர்பாக தேவாயானி மீது புகார் கொடுத்துள்ளார்.

இன்று அல்லது நாளை இது தொடர்பாக நடிகர் சங்கம் விசாரிக்கும் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil