நானே வருவேன் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்... எப்போது தெரியுமா!
சென்னை : இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷ் கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படம் நானே வருவேன்.
தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் காம்போவாக உள்ள தனுஷ் மற்றும் செல்வராகவன் இந்த முறை வித்தியாசமாக பேய் படத்தில் இணைகின்றனர் .
சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் தொடங்க உள்ளது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

ஃபேவரைட் காம்போ
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ள செல்வராகவனின் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பாக செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி இணையும் திரைப்படங்கள் என்றால் ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என இந்த காம்பினேஷனில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களிடமிருந்து பொதுவாக கேட்கப்பட்டது மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என்று.

நானே வருவேன்
அதற்கு பதிலளிக்கும் விதமாக செல்வராகவன் மற்றும் தனுஷ் அடுத்தடுத்து மூன்று படங்களில் இணைந்து பணியாற்ற உள்ளனர். அதில் ஒரு படத்திற்கு நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை காதல் மற்றும் கேங்ஸ்டர் கதைகளில் பணியாற்றி வந்த இந்தக் கூட்டணி முதல்முறையாக பேய் படத்தில் இணைகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான நெஞ்சம் மறப்பதில்லை பேய் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்போது நானே வருவேன் படமும் பேய் படமாக உருவாகிறது.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது அதன்பிறகு லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்பொழுது தனுஷ் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் செல்வராகவனும் இப்பொழுது நடிகராக மாறி சாணிக் காயிதம் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனால் நானே வருவேன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

அடுத்த மாதம் தொடங்க திட்டம்
கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு தனுஷ் அடுத்த மாதம் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க செல்வராகவன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நானே வருவேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கலைப்புலி தாணு தயாரிக்கிறார் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











