»   »  இயக்குநர்களின் முத்த மோகம்!

இயக்குநர்களின் முத்த மோகம்!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா இயக்குநர்களை முத்தப் பேய் பிடித்து ஆட்ட ஆரம்பித்திருக்கிறதாம். கொஞ்ச காலமாக இல்லாமல் இருந்த முத்து முத்தான முத்தக் காட்சிகள் சத்தம் போடாமல் திரும்பவும் வர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு விஷயம் ஆக்கிரமித்திருக்கும். முன்பு விசு எடுத்த குடும்பம் ஒரு கதம்பம் படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து திருமதி ஒரு வெகுமதி, சம்சாரம் அது மின்சாரம் என்று அதே டைப்பில் படம் எடுத்தார். அவரைப் பின்பற்றி வேறு சிலரும் அதே பாணி பெயரில் படம் எடுத்தனர்.

ராமராஜன் நடித்த காலத்தில் கிராமத்துப் படங்களாக தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்றது. பிறகு வந்து சேர்ந்தது முத்தம். கமல்ஹாசனின் புன்னகை மன்னனில் அவர் ரேகாவுக்கு கொடுத்த அந்த முத்தம் மறக்க முடியாதது.

அந்தப் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் படங்களில் முத்தக் காட்சிகள் தவறாமல் இடம் பெற ஆரம்பித்தன. மகாநதியில் சுகன்யாவுக்கு ஒன்றுக்கு இரண்டாக அழுத்தமான இரு முத்தங்களைக் கொடுத்து அசத்தினார் கமல்.

கமல் பாணியைப் பின்பற்றி வேறு சில நடிகர்களும் முத்தக் காட்சியில் குதித்தனர். ஆனால் கமல் முத்தம் போல அவை பரபரப்பாக பேசப்படவில்லை.

இடையில் குத்துப் பாட்டுக்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதால் முத்தக் காட்சிகள் மறைந்து போயின. ஆனால் மறுபடியும் இப்போது முத்தக் காட்சிகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன.

சமீபத்தில மலரினும் மெல்லிய படத்தில் விக்னேஷ், வர்ஷினிக்குக் கொடுத்த முத்தம் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல நெஞ்சைத் தொடு படத்தில் லஷ்மி ராய் ஹீரோ ஜெமினிக்கு உதட்டோடு உதடு சேர்த்து தந்த முத்தக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் மகன் விஜய் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில், கீர்த்தி சாவ்லாவுக்கு அவர் கொடுத்த முத்தமும் பேசப்பட்டது.

இப்போது இன்னொரு பரபரப்பு முத்தமும் படு கிளுகிளுப்பாக பேசப்படுகிறது. அது நினைத்தை முடிப்பவன் படத்தில் இடம் பெறும் முத்தம். ஜெய் ஆகாஷ்தான் இதில் நாயகன். கீர்த்தி சாவ்லா இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து அழுத்தமான பிரெஞ்ச் உம்மா கொடுத்து அம்மம்மா என ரசிகர்களை ஏங்க வைக்கப் போகிறார்கள். படத்தில் இந்த முத்தக் காட்சி ஒரு நிமிடத்திற்கு வருகிறதாம்.

ரசிகர்களுக்கு வேட்டைதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil