»   »  தியாவின் கற்க கசடற...

தியாவின் கற்க கசடற...

Posted By:
Subscribe to Oneindia Tamil

தியா நடித்த குறும்பு, ட்ரீம்ஸ் ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் அட்டர் பிளாப் ஆகிவிட்ட நிலையில் அவரது கை வசம்இப்போது இருப்பது ஒரே ஒரு படம் தான்.

நடிகர் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் நடிக்க ஆர்.வி.உதயகுமார் இயக்கும் கற்க கசடற படம் தான் அது. இதைத் தவிர வேறுவாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் கிறங்கிப் போய் இருக்கிறார் தியா.

அவருக்கு ஆறுதலாக இருப்பது விளம்பரப் படங்கள் தான். இந்தப் படங்களில் நடிக்க நிறையவே வாய்ப்புக்கள் வருகின்றன.இதற்குக் கூட தியாவின் நடிப்பாற்றல் எல்லாம் காரணமில்லை.

டிவி விளம்பரத்திலேயே முடிந்த அளவுக்கு தன் உடல் வனப்பைத் தூக்கி நிறுத்தி காட்டிவிடுகிறார். இதனால் அவருக்கு விளம்பரபட கிரியேட்டர்கள் மத்தியில் ஒரு கிரேஸ் உருவாகியிருக்கிறது.

மேலும் தியாவின் ஒளிவு மறைவில்லாத டைப்பும் மாடலிங் செய்ய ரொம்பவே உதவியாக இருக்கிறதாம்.

என்ன தான் விளம்பரங்களில் நடித்தாலும் துட்டு சேர்ப்பது என்பது சினிமாவில் தானே சாத்தியம். இதனால் தொடர்ந்துகோடம்பாக்கத்தை சுற்றி வந்தவண்ணம் இருக்கிறார் தியா.

முதல் படமான குறும்பு மற்றும் ட்ரீம்ஸ் ஆகிய இரண்டிலும் தியாவுக்கு ஒரு போட்டி ஹீரோயினைப் போட்டுவிட்டார்கள்.இதனால் தான் தன் திறமையை தனியாகக் காட்ட முடியாமல் போய்விட்டதாகச் சொல்கிறார் தியா.

குறும்பில் இவருடன் நிகிதா நடித்தார், ட்ரீம்ஸில் பாருல் என்ற ஹீரோயின் நடித்தார். ஒன்றரை வருடத்துக்கு முன் படத்தைத்தொடங்கியபோது என்னைத் தான் ஹீரோயினாகப் போட்டார் கஸ்தூரிராஜா. அப்புறம் என்ன ஆச்சோ பாருலையும் தனுசுக்குஜோடியாக்கிவிட்டார்.

நான் எனது ரோலை நன்றாகத் தான் செய்தேன். படம் ஓடாததற்கு டைரக்டரிடம் தான் காரணம் கேட்க வேண்டும் என்கிறதியாவிடம், இப்படி கன்னாபின்னாவென்று கவர்ச்சி காட்டுகிறீர்களே, கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே என்று கேட்டால்,என்னாது.. நான் ஓவர் கிளாமர் காட்றோனா? அதெல்லாம் இல்லை என்று மறுக்கிறார்.

நீங்கள் நடிக்கும் கற்க கசடற படத்திலும் போட்டியாக லட்சுமி ராய் என்ற ஹீரோயின் இருக்கிறாரே என்றால், படம் வெளியில்வந்தால் நான் தான் ஜெயிப்பேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் தியா.

இந்தப் படத்தில் கவர்ச்சிக் கோதாவில் தியாவும் லட்சுமி ராயும் சும்மா புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை விட்டால் அடுத்து தியாவின் கையில் ஒரு படமும் இல்லை. இதனால் தமிழோடு தெலுங்கு, இந்தி பக்கமும் முயற்சிசெய்து கொண்டிருக்கிறார் தியா.

தமிழில் அடுத்தடுத்து படங்கள் அமையாமல் போனது ஏன் என்று கேட்டால், மும்பைப் பெண்கள் வந்து இங்கே குவியஆரம்பித்துவிட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அவர்களையே முழுக் காரணமாக சொல்லிவிட முடியாது.சென்னை கெல்லீசைச் சேர்ந்த முழுத் தமிழ்ப் பெண். இதனாலேயே கூட நம்மவர்கள் ஒதுக்குவார்களே என்கிறார் தியா.

சமீபகாலமாக டென்ஷனைக் குறைக்க புதிதாக தியானப் பயிற்சியும் எடுத்து வருகிறாராம் தியா.

தினமும் நான்கு மணி நேரம் வரை தியானம் செய்து வருகிறாராம் (நிறைய நேரம் தான் இருக்கே).

தனது கோடம்பாக்க முயற்சிகள் பலிக்காமல் போய்விடும் பட்சத்தில் தானே ஒரு நடனப் பள்ளியை ஆரம்பிக்கும் முடிவிலும்இருக்கிறார். இதற்காக தனது நடனத்தையும் கூர் செய்து வருகிறார். (டிஸ்கோத்தேக்களில் தியாவின் அதிரடி நடனம் ரொம்பபெயர் பெற்றது.)

இவர் ஆரம்பிக்கப் போகும் நடனப் பள்ளியின் பெயர் வித்யாலயா. காரணம் தியாவின் இயற்பெயர் ஸ்ரீவித்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil