»   »  பொறம்போக்கு ஏக்தா!

பொறம்போக்கு ஏக்தா!

Subscribe to Oneindia Tamil

பொறம்போக்கு என்ற பெயரில் தெலுங்கில் பொறுப்பாக ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்குக்காரர்கள் டைட்டில் வைப்பதில் மகா கில்லாடிகள். படத்தில் சரக்கு இருக்கிறதோ இல்லையோ, டைட்டிலில் சத்து இருப்பது போலப் பார்த்துக் கொள்வார்கள். சத்தாய்ப்பான டைட்டில், சில மசாலா ஆட்டங்கள், குத்துப் பாட்டுக்கள் என கல்லாக் கட்டுவதில் மணவாடுகள் மகா திறமைசாலிகள்.

அந்த வகையில், பொறம்போக்கு என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. தமிழில் சில படங்களில் நடித்து தேறாமல் போன நவ்தீப்தான் இதில் நாயகன். அவருக்கு ஜோடியாக வருகிறார் ஏக்தா கோஸ்லா.

சும்மா சொல்லக் கூடாது. படு ஜோராக இருக்கிறார் ஏக்தா. படத்தின் பெயர் வேஸ்ட் லேண்ட் ஆக இருக்கலாம், ஆனால் ஏக்தா ஒண்டர் லேண்டிலிருந்து ஜஸ்ட் என்டர் ஆனவர் போல படு ஃபிரஷ்ஷாக, பிரமிப்பாக இருக்கிறார்.

நெகு நெகு உயரம், நச்சென்ற அழகு, ஆளை அசர வைக்கும் கூர் மூக்கு என படு குமுக்காக இருக்கிறார் ஏக்தா. தக்காளிக் கரைசலில் தப்பித் தவறி விழுந்து விட்டது போல ஒரு கலர் புல் தேகம்.

படு தேஜஸாக இருக்கும் ஏக்தா, கிளாமரிலும் கலக்கியிருக்கிறார், சுடிதாரிலும் சுருட்டியிருக்கிறார். நவ்தீப் ஹீேரா என்பதால் படம் முழுக்க அவரையும், ஏக்தாவையும் காதல் களியாட்டத்தில் விளையாட விட்டிருக்கிறார்கள்.

ஷீலாவுடன் இளவட்டத்தில் கொட்டம் அடித்தார் நவ்தீப். அதற்கு முன்பு அறிந்தும் அறியாமலும் படத்தில் சமீக்ஷாவுடன் சல்லாபம் செய்தார். இப்போது தெலுங்கில் ஏக்தா கோஸ்லாவுடன் ஏறக்கட்டி வருகிறார். மாப்பிள்ளைக்கு மண்டையில மச்சம் போல!

முற்றிலும் இளைஞர்களுக்கான படம் என்பதால் படம் முழுவதும் படு இளமையாக இருக்கிறது. ஏக்தாவும் வடக்கத்தி வனிதைதான். அங்கு மாடலிங் செய்து கொண்டிருந்தவர் சினிமாக்காரர்களின் கண்ணில் பட ஹைதராபாத்துக்கு கொத்திக் கொண்டு வந்து விட்டார்களாம்.

தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தில் குந்திக் கொண்டிருக்கும் பல ராணிகளை கீழிறக்கி தான் நம்பர் ஒன் ஆவதே லட்சியம் என்கிறார் ஏக்தா. அதற்கேற்றார் போல டான்ஸிலும், கிளாமரிலும் கில்லி மாதிரி பின்னி எடுக்கிறாராம்.

குத்துப் பாட்டுக்களிலும் தானே கும்மி விடுவதாக கூறுவதால், தயாரிப்பார்களுக்கு ஏக்தாவைப் பிடித்துப் போயிருக்கிறதாம். இதனால் சில பட வாய்ப்புகள் ஏக்தாவைத் தேடி ஓடி வந்து கொண்டிருக்கிறதாம்.

தமிழில் இந்தப் படத்தை போடா பொறம்போக்கு என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டாலும், வெளியிடலாம், பார்க்கத் தயாராக இருங்கள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil