»   »  கௌதம் மேனன் - தனுஷ் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்... விரைவில் ரிலீஸ்!

கௌதம் மேனன் - தனுஷ் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்... விரைவில் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்க சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பமான படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'.

தர்புகா சிவா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை கௌதம் மேனன் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு நடத்தி வந்தார்.

இப்படியே கடந்து ஷூட்டிங்கே சில வருடங்களாக நடந்துகொண்டிருக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டமாக நடந்து வருகிறது.

எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா

கௌதம் மேனன், விக்ரம் நடிக்க இயக்கி வந்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பைத் தள்ளி வைத்துவிட்டு, 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

டீசர்

டீசர்

இந்தப் படத்தின் டீசர் மற்றும் சில பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால், படம் எப்போது முடிவடைந்து வெளிவரும் என்பது தெரியாமலேயே இருந்தது.

சீக்கிரம் ரிலீஸ்

சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருப்பதால் அவற்றை விரைவாக முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இப்படம் வெளிவந்ததும் 'வட சென்னை' படம் வெளியாக உள்ளது.

மாரி 2

மாரி 2

தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த 'விஐபி 2' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்து வருகிறார். 'வட சென்னை' அதன் பின்பு 'மாரி 2' படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Dhanush, Megha Akash and many others in the direction of Gautham Menon's 'Enai nokki paayum thotta'. The shooting of this film has been going on for the past few years and the last schedule shooting of the film is going now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X