»   »  கடலில் விழுந்து தத்தளித்த ஃபஹத், நமிதா: நடிப்பு என வேடிக்கை பார்த்த மீட்புக்குழு

கடலில் விழுந்து தத்தளித்த ஃபஹத், நமிதா: நடிப்பு என வேடிக்கை பார்த்த மீட்புக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பனாஜி: மலையாள படப்பிடிப்பின்போது நஸ்ரியாவின் கணவரும், நடிகருமான ஃபஹத் மற்றும் நடிகை நமிதா பிரமோத் கடலில் மூழ்கப் பார்த்தனர்.

மலையாள இயக்குனர் ரஃபி ஃபஹத் ஃபாசில், நமிதா பிரமோத் உள்ளிட்டோரை வைத்து ரோல் மாடல்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நமிதா வாட்டர் ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளராக நடிக்கிறார்.

படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. அப்போது நடந்த சம்பவம் குறித்து நமிதா கூறுகையில்,

கடல்

கடல்

நான் ஃபஹதை கடலுக்குள் அழைத்துச் செல்லும் காட்சியை படமாக்கினார்கள். நீரில் செல்லும் பைக்கில் நானும் ஃபஹதும் சென்றோம். அப்போது பெரிய அலை வர நாங்கள் இருவரும் நீரில் விழுந்து தத்தளித்தோம்.

தத்தளிப்பு

தத்தளிப்பு

நாங்கள் தத்தளித்ததை பார்த்து அங்கு எங்களை மீட்க நின்ற நீச்சல் வீரர்கள் இதுவும் படத்தின் காட்சி என நினைத்து வேடிக்கை பார்த்தனர். பின்னர் படக்குழுவினர் அலறிய பிறகே அவர்கள் வந்தனர்.

ஃபஹத்

ஃபஹத்

நாங்கள் கடலில் விழுந்த இடத்தில் ஆழம் அதிகம். இருப்பினும் நானும் ஃபஹத்தும் பத்திரமாக நீந்தி கரை சேர்ந்தோம். நல்ல வேளை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றார் நமிதா.

நஸ்ரியா

நஸ்ரியா

ஃபஹத்தை திருமணம் செய்த பிறகு நஸ்ரியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர் வீட்டில் இருந்து கணவரை கவனித்து வருகிறார். ஆனால் அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

English summary
When Fahadh Fasil and Namitha Pramod was hit by a giant wave and thrown off jet ski while shooting in Goa, the guards mistook it to be part of acting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil