»   »  படப்பிடிப்பில் விபத்து: லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் ஜி.வி.பிரகாஷ்

படப்பிடிப்பில் விபத்து: லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் ஜி.வி.பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். அடுத்தடுத்து 2 ஹிட்களின் மூலம் அரை டஜன் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் படப்பிடிப்பு நேற்று திண்டிவனம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது.

G.V.Prakash Met Accident near Tindivanam Highway

இதில் ஜி.வி.பிரகாஷ், ஆர்ஜே பாலாஜி இருவரும் காரில் செல்வது போலவும், வில்லன்கள் இருவரையும் துரத்துவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது.

இந்தக் காட்சியின்போது நெடுஞ்சாலையில் வந்த கண்டெய்னர் ஒன்று ஜி.வி.பிரகாஷ், ஆர்ஜே பாலாஜி சென்ற காரின் மீது மோதியது.

இதனால் ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருக்கும் தடுப்புச்சுவரின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் அடிப்பட்டது.

தொடர்ந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதனை செய்த பின் பெரிதாக எந்த அடியும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

அதன்பின் ஜி.வி.பிரகாஷ், ஆர்ஜே பாலாஜி இருவரும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தற்போது படப்பிடிப்பில் நேர்ந்த இந்த விபத்து கோலிவுட்டில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Yesterday Actor G.V.Prakash Met Accident near Tindivanam Highway. Now He is Perfectly Alright and Continue Movie Shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil