»   »  லைவ் கஜினி

லைவ் கஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தி கஜினியின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஆரம்பித்து விட்டது. சில பல மாற்றங்களுடன் படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளார் முருகதாஸ்.

தமிழில் மெகா ஹிட்டான கஜினி, இப்போது இந்திக்கும் போயுள்ளது. அதே முருகதாஸ், அதே ஆசின். ஆனால் ஹீரோ அமீர்கான், இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான்.

மும்பையில் பட பூஜை சிறப்பாக நடந்துள்ளது. ஒரிஜினல் கஜினி சூர்யா கிளாப் அடிக்க, ஸ்டாலின் சிரஞ்சீவி கேமராவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தனர்.

இந்தி ரசிகர்களுக்கேற்ப படத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளாராம் முருகதாஸ். மேலும் படப்பிடிப்பின்போதே டப்பிங்கையும் முடித்து விடுகிறார்கள். இதற்காக லைவ் ரெக்கார்டிங் முறையைக் கையாளுகின்றனர்.

இந்த முறையில் ஒலிப்பதிவு செய்யும்போது சத்தம் எதுவும் கேட்கக் கூடாது என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு ஆட்களை நிறுத்தி வைத்து சவுண்ட் கண்ட்ரோல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

படப்பிடிப்பின்போது பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி தரவில்லை. அதேபோல கலைஞர்களும் பேட்டி தரக் கூடாது என முருகதாஸும், ஆமீர்கானும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

இந்தியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு மலேசியா, சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். ஆசினையும், ஆமிரையும் எகிப்தில் விட்டு டூயட் பாட வைக்கும் திட்டமும் முருகதாஸிடம் உள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil